chitra ramakrishnanபங்கு சந்தையில் பார்ப்பனர்கள் அடித்த கொட்டம் - வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன், சாமியாரின் வழிகாட்டல்களை பெற்று செயல்பட்டதில் புதிய திருப்பமாக சித்ரா ராமகிருஷ்ணனை ஆட்டுவித்தது சாமியாரா? அல்லது அவரைப் பற்றி நன்கு அறிந்த ஆசாமியா? என்று கேள்வி எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணனின் கூந்தல் அழகை வர்ணித்தும், அவரை சிசெல்ஸ் தீவுக்கு செல்லலாம் என்றும் அழைப்பு விடுத்தும் சாமியாரின் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

வடிவேலுவின் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தையில் அரங்கேறிய காமெடி கலந்த மோசடியே பொருளாதார வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். (ரிக்யஜுர்சாம@அவுட்லுக்.காம்) என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து சிரோன்மணி என்ற சாமியார் அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் பரிந்துரைகளை நம்பி தேசிய பங்குச் சந்தையில், பங்குச் சந்தை அனுபவமே இல்லாத ஒருவருக்கு பதவிகளையும், பணத்தையும் வாரியிறைத்துள்ளார் அந்த பங்குச்சந்தையின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணன். சட்டத்தை மீறி பங்குச்சந்தையின் முக்கிய முடிவுகளை வெளி நபரான சாமியார் என்று கூறப்படும் அந்த நபருடன் பகிர்ந்து கொண்டதோடு நிற்காமல், அவர் பரிந்துரைப்படி, எவ்வித விதிகளையும் பின்பற்றாமல், கண்மூடித்தனமாக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை 2013 ஆம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் முதன்மை ஆலோசகராக நியமித்துள்ளார் சித்ரா ராமகிருஷ்ணன்.

பால்மர் என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியன், தேசிய பங்குச் சந்தையில் ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 2013ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளில் இவரின் ஊதியம் 5 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. எல்லோருக்கும் 5 நாள் வேலை என்றால், ஆனந்த் சுப்ரமணியனுக்கு மட்டும் 3 நாள்தான் வேலை. அதுவும் பங்குச் சந்தை தலைவராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணனின் அறையின் அருகிலேயே தனியறை வசதியுடன் விரும்பும் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனந்த் சுப்ரமணியன். உலகம் முழுவதும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கும் சிறப்பு வசதியை ஆனந்த் சுப்ரமணியனுக்கு சித்ரா ராமகிருஷ்ணன் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததால் வாரந்தோறும் சென்னை வந்து சென்றுள்ளார் ஆனந்த்.

சாமியார் அனுப்பிய மின்னஞ்சலை நம்பி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஏராளமான வசதிகளை செய்து கொடுத்ததோடு நிற்காமல், நிர்வாகம் சார்ந்த பல முக்கிய முடிவுகளை எடுத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார் சித்ரா. குறிப்பாக கோ லொக்கேஷன் எனப்படும் பங்குச்சந்தை பரிவர்த்தனை தகவல்களையும் சாமியார் மற்றும் அவர் கூறிய சில நிறுவனங்களுக்கு சித்ரா முன்கூட்டியே பகிர்ந்து கொண்டதாகவும் புகார் எழுந்ததன் காரணமாகவே பதவிக்காலம் முடியும் முன்பே அவர் பங்குச் சந்தை தலைவர் பதவியில் இருந்து 2016ஆம் ஆண்டு விலகியதாகவும் செபி சந்தேகம் தெரிவித்துள்ளது. சித்ராவின் செயல்பாடு பங்குச் சந்தை விதிகளுக்கு எதிரானது என்று கூறி அவருக்கு 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டாலும், இதுகுறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்பதை செபி வெளியிட்ட உத்தரவில் உள்ள தகவல்கள் காட்டுகின்றன.

குறிப்பாக 2015ஆம் ஆண்டு சாமியார் என்ற பெயரில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அந்த நபர், இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களின் கூந்தல் உங்கள் தோற்றத்தை கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டுகிறது என்றெல்லாம் வர்ணித்துள்ளார். கூந்தல் பரமாரிப்புக்காக சில டிப்ஸ்களையும் வழங்கிய சாமியார், இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழில் கிருஷ்ணரை புகழ்ந்து பாடும் 'மகர குண்டலம்' பாடலை அனுப்பிய சாமியார், பாடலை கேட்டீர்களா? என்று மற்றொரு மின்னஞ்சலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு மின்னஞ்சலில் உங்களோடு நேற்று நான் இருந்த நேரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுக்காக நீங்கள் செய்த இந்த சிறிய விஷயங்கள் உங்களை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணரவைக்கும் என சித்ரா ராமகிருஷ்ணன் வெட்கப்படும் அளவுக்கு வர்ணத்து தள்ளியிருக்கிறார். 2015 மார்ச் மாதத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வையுங்கள் என சித்ரா ராமகிருஷ்ணனிடம் கேட்டிருக்கும் சாமியார், மற்றொரு இ-மெயிலில், தான் அடுத்த மாதம் சீஷெல்ஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், நீங்களும் பயணத்துக்கு தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்டு தனது உதவியாளர் மூலம் பதில் மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார் சித்ரா. பயணத் திட்டம் பற்றியும் இருவரிடையே தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் அந்த அழகான தீவுக்கு சென்று இருவரும் கடலில் குளிக்கலாம், கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்... உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்றெல்லாம் உருகி உருகி இ-மெயில் தட்டியிருக்கிறார் அந்த பெயர் தெரியாத சாமியார். சீஷெல்ஸ் தீவுக்கு ஹாங்காங் வழியாக செல்ல வேண்டுமென்பது தனது விருப்பம் அல்லது சிங்கப்பூர் வழியாக கூட செல்லலாம், உங்களுக்கு தேவையானவற்றை சேசு செய்வார் என்றும் பயணத் திட்டங்களை வகுத்திருக்கிறார் சாமியார். அழகு வர்ணிப்பு, வெளிநாட்டுப் பயணத் திட்டம் போன்றவற்றோடு நிற்காமல் பங்குச் சந்தை இயக்குனர்களாக யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்தெல்லாம் ஆலோசனை வழங்கியுள்ளார் சாமியார்.

மேலும் சாமியார் பெயரில் வந்த மின்னஞ்சல்கள் மூலம், அவர் பங்குச் சந்தை மட்டுமின்றி டெல்லி அரசியல் வட்டாரத்திலும் முக்கிய நபர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. முறைகேடுகளை கண்டறியக்கூடாது என்பதற்காகவே இ வேஸ்ட் என்ற பெயரில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரது மடிக் கணினிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சாமியார் போர்வையில் சித்ரா ராமகிருஷ்ணனை ஆட்டுவித்தது, அவரை நன்கு அறிந்த ஒரு நபராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

‘செபி’ அமைப்பு ‘அந்த சாமியார்’ என்பதே கற்பனை கதாபாத்திரம்; அந்த நபரே ஆனந்த் சுப்ரமணியம் தான் என்கிறது. சாமியார் ‘ஆன்மீக சக்தி’ உள்ளவர். காட்டுக்குள்ளிருந்து கொண்டு இணைய தொடர்புகள் ஏதுமின்றியே மின்னஞ்சல் செய்யும் ஆன்மீக பலம் பெற்றவர் என்கிறார் சித்ரா. அவாள்கள் எப்படி வேண்டுமானாலும் காதில் பூ சுற்றுவார்கள். வழக்கு மதுரை நீதிமன்றத்துக்கு வந்தால் சாமியார்களுக்கு அப்படிப்பட்ட ஆன்மீக சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த காலத்திலேயே திகம்பர சாமியார் சினிமாவில் இது விளக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்புகள் வந்தாலும் வியப்பதற்கு இல்லை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It