நான் ஏன் கக்கூசு எடுக்க வேண்டும்; நீ ஏன் மலசல உபாதைக்குப் போக வேண்டும். நீ ஏன் அதன் பயனை அடைய வேண்டும் என்று நீங்கள் துணிந்து கேட்க வேண்டும். இதை அனுமதிக்கும் கடவுளை வெறுக்க வேண்டும்.உடைத்து ரோட்டுக்குச் சல்லி போட வேண்டும். இந்த உரிமையை மறுக்கும் சட்டத்தையும், சாத்திரத்தையும் நெருப்பி லிட்டுப் பொசுக்க வேண்டும்.

இந்த உரிமையை மறுக்கும் மதத்தை மடியச் செய்ய வேண்டும். மனத்தில் நீங்கள் உறுதி கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க மன உறுதியின்றேல் காரியம் கை கூடாது.

உறுதி இருந்தாலோ அது உங்களை வெற்றிப் பாதையில் தள்ளிக் கொண்டு போகும். உறுதி உள்ளவனைச் சாமியோ, பூதமோ கூட பயமுறுத்தாது. அதற்கு அதிகாரமும் இல்லை, உன்னுடைய அறிவின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு.

- பெரியார்

Pin It