ஆப்பிரிக்காவில் உள்ளது சூடான் நாடு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடாகும். இங்கு ராணுவ புரட்சி நடத்தி 1989 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த ஒமர் அல் பக்ஷீர் இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்கு தங்களை புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர்.

தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடி வந்தது. இந்த இயக்கம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது.

2005 ஆம் ஆண்டு அரசுக்கும், இந்த இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 2011 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது.  வாக்கெடுப்பில் தெற்கு சூடான் தனியாக பிரிவதற்கு பெரும்பாலான ஆதரவு கிடைத்துள்ளது. தென் சூடான் விடுதலை நிகழ்வில் பங்கேற்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தனி நாட்டிற்கான வாக்கெடுப்பு அடுத்த வாரம் முழுமையடை கிறது. முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதியை தென் சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எஸ்.பி.எல்.எம். அழைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்ட அறிக்கையில், ‘இது அரசாங்கத்திற்கான அங்கீகாரம் மட்டுமின்றி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான அங்கீகாரமும் ஆகும் என்று கூறியுள்ளார். விடுதலை பெற்ற தென் சூடான் மக்களின் மகிழ்ச்சியை ஈழத் தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்வதுடன் அதில் இணைந்து கொள்கிறார்கள் என்றார்.

இந்த உறவு புதிதல்ல. மே 2009 இல் பில்டல்பியா நகரில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வில் சூடான் மக்கள் விடுதலை இயக்க பிரதிநிதி கலந்து கொண்டு, தென் சூடானின் விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும், விடுதலை போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் பேசினார். நாடு கடந்த தமிழீழ அரசை தெற்கு சூடான் அங்கிகரித்திருப்பது ஈழ விடுதலைக்கு சர்வதேச அரங்கில் கிடைத்துள்ள முதல் அங்கீகாரமாகும்.

கழக கொள்கைப் பயணம்: டிசம்பர் மாத பதிவுகள்


2010 ஆம் ஆண்டு கழகத்தின் கொள்கைப் பயணத்தின் தொகுப்பு ஏற்கனவே நவம்பர் மாதம் வரை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் பதிவான சில முக்கிய கழக நிகழ்வுகள்:

விடுதலைப் புலிகள் பயிற்சிப் பெற்ற களமாகிய கொளத்தூர் அருகே உள்ள புலியூர் பிரிவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி தளபதி மாவீரர் பொன்னம்மாள் நினைவு நிழற்கூடப் பகுதியில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. (நவம்பர் 27) புதுவை கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம் (நவம்பர் 26) தூத்துக்குடி மாவட்டக் கழகம், ஒரு நாள் முழுதும்  சாதி தீண்டாமை இழிவு ஒழிப்புப் பரப்புரை நடத்தியது (நவம்பர் 20). லண்டனில் டிசம்பர் 2 ஆம் தேதி போர்க் குற்றவாளி ராஜபக்சே பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. அடுத்த நாளே சென்னையில் கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம், தோழமை அமைப்புகளுடன் இணைந்து ராஜபக்சேவை கைது செய்யக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, 200 தோழர்கள் கைதானார்கள். (டிச. 3)

கோவை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இலங்கை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்த்து கழகம் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால், நிகழ்ச்சியில் பங்கேற்காமல், நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டம் பிடித்தார். திருப்பூரில் மாவீரர் நாள் நிகழ்வை தோழர்கள் நடத்தினர். (நவ.27)

லோகு. அய்யப்பனை விடுதலை செய்யக் கோரி புதுவையில் கழகம் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. (டிச.3)

Pin It