1) கோட்டு, சூட்டு அணியாமல் வழமையான உடையில் மோடியை வரவேற்ற மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு நோட்டீஸ். -செய்தி

சட்டையே போடாமல், ‘பூணூல்’ உடம்புடன் மோடியை வரவேற்கும் புரோகிதர்களுக்கும் இதேபோல் ‘நோட்டீஸ்’ அனுப்புவார்களா?

2) எனக்கு பத்ம விருது வேண்டாம் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டேன். - ‘யோகா குரு’ ராம்தேவ்

அதெல்லாம் ‘பாரத ரத்னா’ விருது உங்களுக்குக் கிடைக்காது; அது காஞ்சி ஜெயெந்திரனுக்குத்தான்.

3) அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். - உச்சநீதிமன்றம்

மக்கள் நினைவுக்கு வராமல் மறந்து போகிறவர்களைத் தானே விளம்பரப்படுத்த வேண்டும்; இதுவும் நியாயம்தான்!

4) தமிழக கிராமங்களில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் பூட்டப்பட்டு, மாட்டுத் தொழுவங்களாகி விட்டன. - ‘தமிழ் இந்து’ செய்தி

ஊர்தோறும் கோயில் கும்பாபிஷேகம் ‘திவ்யமா’ நடக்கும்போது, இப்படி ‘அபசகுனமாக’ நூலகம் பற்றி எல்லாம் பேசப்படாது!

5) மோடி பிறந்த ‘கன்ச்சி’ என்ற ஜாதி குறித்து ‘தூர்தர்ஷன்’ 128 தொடர்களை ஒளிபரப்ப இருக்கிறது. - செய்தி

அரசுத் தொலைக்காட்சியை மக்கள் பார்க்க விடாமல் தடுத்தே தீருவோம் என்று உறுதி ஏற்று செயல்படுகிறார்கள், போல!

6) வடகொரியாவில் இராணுவ கருத்தரங்கில் தூங்கிய பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை. - செய்தி

இப்படி மரண தண்டனைகளை வழங்கினால்தான் நாட்டில் தூக்கத்தைக் குறைக்க முடியும்; அப்போதுதான் தூங்குவதற்கும் மக்கள் பயப்படுவார்கள்.

7) கங்கையை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு. - செய்தி

பக்தர்கள் - கங்கையில் மூழ்கி தொலைத்த ‘பாவங்களையும்’ சுத்தப்படுத்தி விடுவீர்களா?

8) ஜெயலலிதா விடுதலைக்காக சேலம் வடசென்னிமலை கோயிலில் 1008 தொண்டர்கள் மொட்டை போட்டனர். - செய்தி

மொட்டையைத் தொடர்ந்து, அம்மாவுக்கு முடிசூட்ட ‘முடி வளர்க்கும்’ வேண்டுதலை செய்வாங்க போலிருக்கு!

Pin It