விழுப்புரம் மாவட்ட கழக சார்பில் சாதி தீண்டாமைக்கு எதிரான இரண்டு நாள் பரப்புரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. முதல் நாள் 13.8.2011 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சௌந்தரவள்ளி பாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்ச்சியில் மல்லாபுரத்தைச் சார்ந்த ராஜா என்பவர் கழகத்தில் இணைந்தார்.

இவ்வூரை சார்ந்த விவசாய விடுதலை முன்னணி தோழர் இராமலிங்கம், தோழர்களுக்கு தேனீர் ஏற்பாடு செய்தார். மதியம் 1 மணியளவில் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடை பெற்றது. மதிய உணவுக்குப் பின் மாலை 4 மணியளவில் அரம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய பிரச்சாரம், மாலை 6 மணிக்கு பொய் குணத்தில் நிறைவடைந்தது. முடிவில் விடுதலை சிறுத்தை கட்சித் தோழர்கள் தேனீர் வழங்கினர். பொய்குணத்தைச் சார்ந்த கார்த்திக் எனும் புதிய தோழர் கழகத்தில் இணைந்தார். முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு செ.நாவாப்பிள்ளை முன்னிலை வகிக்க, மாவட்ட பொருப்பாளர் ச.க. இளையராசா தலைமை வகித்தார்.

இரண்டாம் நாள் 14.8.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் புதுப்பட்டில் பரப்புரை தொடங்கியது. நிகழ்ச்சி முடிவில் பெயர் சொல்ல விரும்பாத தோழர் ஒருவர் தேனீர் செலவுக்கு ரூ.200 கொடுத்தார். அதனை அடுத்து 12 மணியளவில் புதூரில் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பின் மதியம் 4 மணியளவில் வடசிறுவள்ளூரில் துவங்கிய பிரச்சாரப் பயணம் மாலை 6 மணியளவில் மூங்கில் துறைப்பட்டில் நிறைவடைந்தது. கம்யூனிஸ்ட் தோழர் நடராஜன் தேனீர் வழங்கினார். மூங்கில்துறைபட்டைச் சேர்ந்த தோழர் பன்னீர் செல்வம் கழகத்தில் இணைந்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு செ. பிரபு முன்னிலை வகிக்க, ச. பெரியார் வெங்கட் தலைமை வகித்தார்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் சென்னை தோழர் நாத்திகன், சாதி ஒழிப்புப் பாடல்கள் பாடினார். காவை இளவரசன், ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி சிறப்புரை யாற்றினார்.. பொது மக்களிடையே துண்ட றிக்கைகள்  வழங்கப்பட்டன. மா. தலித்குமார் நன்றி கூறினார். க. இராமர், சு. தினகரன், பெ. கோவிந்தன், ஊமைத் துரை, கோ. சக்ரடீசா உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Pin It