அய்.நா. குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற ‘டைம்ஸ்‘ ஏட்டின் எழுத்தாளர் கேத்தரின் பிலிப். அந்த ஏட்டில் கட்டுரை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.15) எழுதியுள்ளார். அதில் பான்கிமூன் தலைமை ஆலோசகராக இருந்த விஜய நம்பியார், கொழும்புலிருந்த அய்.நா. அலுவலக ஊழியர்களுக்கு, “படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை, அய்.நா.வுக்கு தெரிவிக்க வேண்டாம்; இதனால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த விஜய் நம்பியாரின் சகோதரரான சதீஷ் நம்பியார், இலங்கை ராணுவத்துக்கு ஆலோசகராக ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்தார். இதில் அய்.நா. மீது படிந்துள்ள கறையை துடைக்கவே முடியாது என்று கேத்தரின் பிலிப் எழுதியுள்ளார்.