“சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே மூடநம்பிக்கைக் கொண்ட புராணக் கதைகள் புகுத்தப்படுகின்றன. இங்குக் கல்வி கொடுப்பவர்கள் இந்தக் கல்வியால் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கோ, வாழ்க்கைக்கோ எவ்வளவு பயன்படும் என்பதை முக்கியமாய்க் கவனிப்பதில்லை.”

“உலகக் கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான். ஆனால், அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் மோட்சத்திற்குப் போகலாம் என்று நினைப்பான். பெரிய வான சாஸ்திர நிபுணனாக இருப்பான். அவனும் தன் இறந்த தந்தைக்கு (திதி மூலம்) அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவான் - அவனும் தன் மனைவியையும், மக்களையும் வீட்டுக்குத் தூரம் என்று வீட்டுத் திண்ணையில் தள்ளி மூடி வைத்து விட்டு உள்ளே தாழ்ப்பாள் போட்டுத் தூங்குவான்.”

“கல்வியானது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திற்குமாக ஓர் இணையற்ற முதலீடு... கல்வி அனைவருக்கும் தேவையான ஒன்று. சமத்துவம், சமயச் சார்பின்மை, சனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தில் காணப்படும் உயரிய குறிக்கோளுடைய கல்வியே உகந்த வழி; மேலும் நம் பொருளாதாரத்தில் பல்வேறு நிலைகட்கும், பிரிவுகட்கும் தேவையான தேர்ந்த மனித சக்தியை உருவாக்கி வழங்கக் கூடியது கல்வி மட்டுமேயாகும்.”

- பெரியார்

 அப்பா - மகன்

மகன் : சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக் கட்டணத்தை ரூ.32.500-லிருந்து ரூ.62,500 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதே அப்பா!

அப்பா : இது அநீதி; அக்கிரமம் மகனே!

மகன் : ஒவ்வொரு நாளும் கலைஞரையும், அரசு அறிவிப்புகளையும் பாராட்டி அறிக்கை வெளியிடும் நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்தும் கி.வீரமணி, இதில் மவுனம் காப்பது ஏன் அப்பா? கல்விக் கட்டண உயர்வை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

அப்பா : எனக்குத் தெரியாது மகனே!

Pin It