இராவணனை வழிபடக்கூடிய பழங்குடி மக்கள் இந்தியாவில் இருக் கிறார்கள். இராமாயணம் - ஆரிய திராவிடப் போராட்டத்தையே குறிக் கிறது என்றார், மறைந்த ஜவகர்லால் நேரு. நேரு குடும்பத்தில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவரும் டெல்லியில் இராவணன் உருவத்தை எரிக்கும் ‘ராமலீலா’ ஆரியத் திருவிழாவில் பங்கேற்று, தென்னாட்டு மக்களை திராவிடர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

மாவீரர் இராவணன் பூமியில் வாழ்ந்த ஈழத் தமிழர்களை அழித் தொழித்தக் கூட்டம், மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. ‘இராமன் பிறந்த இடத்தை’ உயர்நீதி மன்றங்கள் தீர்மானிக்கின்றன.

 ‘இராவணன்’ அழிவில் சோனியா குடும்பம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது.

அன்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற இராமாயணத் தொடருக்கு கலைஞர் கருணாநிதி ‘மூக்காஜி’ என்ற பெயரில் பதிலடி தந்து இவ்வாறு எழுதினார்:

 டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் ராவணன் உருவங்களை எரிப்பது தொடர்ந்தால், “தென்னாட்டிலும் ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்” (‘முரசொலி’ 8.10.1954) என்று போர்ச்சங்கு ஊதினார்.

 இன்ற சொக்கத் தங்கம் சோனியாவே இராவணன் எரிப்பில் பங்கேற்கிறார். கலைஞர் மவுனம் சாதிக்கிறார்.

 இந்தியா இத்தாலியப் பிடிக்குள் வந்தாலும், ஆரியத்துக்குத்தான் துணை போகிறது! அய்யகோ; தமிழா, இதுவா உன் நிலை?

 

பெரியார், பிரபாகரன் நாட்காட்டி சட்ட விரோதமா?

 பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார், பிரபாகரன் படத்தோடு வெளியிட்ட நாட்காட்டியை விற்பனை செய்ததாக, கழகத் தோழர் பல்லடம், சங்கேதி பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. கழக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, இளங்கோ ஆகியோர் வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் படத்தை விற்பனை செய்வது, பயங்கரவாத நடவடிக்கை அல்ல. ஒரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதே பயங்கரவாத நடவடிக்கை அல்ல.

1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டு மேலும் திருத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக கூட்டமே நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது கருத்துரிமை பறிப்பு ஆகும். அத்துடன் அரசியல் சட்டம் 19வது பிரிவு வழங்கும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. எனவே 39(1)(பி)(1)-வது பிரிவு அடிப்படை உரிமைக்கு முரணானது என்பதால், அப் பிரிவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
Pin It