ஒரு நொடி போதும், முகநூலில் @சண்டையிடுவதை_ நிறுத்துக_வாக்களிக்கத்_தொடங்குக' இடுகைக்கு விருப்பம் தெரிவிக்க!

ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் ஜனநாயகத்தையும் நீதியையும் ஆதரிப்போருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்

சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனப்படும் பன்னாட்டுக் கல்வி இயக்கம் வியாழக்கிழமையன்று தொடங்கப் பெற்றது, பிணக்கைத் தீர்க்க ஓர் அமைதி வழியாக நேரடி சனநாயகத்தைப் பயன்படுத்துவதை விளம்பரப்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

இப்போது உலகெங்கும் சமூக ஊடக மேடைகளில் இந்தப் பரப்புரை இயக்கத்தின் முதல் 60 நொடிக் காணொலி ஓடிக்கொண்டிருக்கிறது. ஹாங்காங்கிலும் தீவு நாடாகிய சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் நெடுநாளைய விடுதலைப் போராட்டத்திலும் தீராதுள்ள பிணக்குகளை இந்தக் காணொலி எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களும், உலகெங்குமுள்ள தமிழர்களும் அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த ஜனநாயகம் மற்றும் நீதியின் நேயர்கள் அனைவரும் இன்று சில மணித்துளி செலவிட்டு, முகநூலில் @சண்டையிடுவதை_நிறுத்துக_வாக்களிக்கத்_தொடங்குக எனும் இடுகைக்கு ”விருப்பம்” தெரிவிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

”சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” எனும் இயக்கம் உலகெங்குமிருந்து நேரடி ஜனநாயக வல்லுநர்களும் அமைப்புகளும் – ஆராய்ச்சியாளர்கள், சட்டத் தரணிகள், அரசுசாரா அமைப்புகள், கல்வியாளர்கள் – அளித்த ஆதரவுடன், இலாபநோக்கற்ற பொறுப்புக் குடிமக்கள் அறக்கட்டளையால் தொடங்கப் பெற்றது. (www.stopfightingstartvoting.org)

இந்தக் காணொலி ஈழத்தமிழர்களின் முகங்களையும் பொது வாக்கெடுப்புக்கான நமது போராட்டத்தையும் காட்டுகிறது. சிறிலங்கா அரசால் 40,000த்துக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டது குறித்தும், பன்னாட்டு மனிதவுரிமைச் சட்டமும் பன்னாட்டு மனிதநேயச் சட்டமும் இப்படி மொத்தமாக மீறப்பட்டதை ஐநா ஆவணப்படுத்தியிருப்பது குறித்தும் இந்தக் காணொலி விழிப்புணர்வு ஏற்படச் செய்ய முனைகிறது. கொல்லப்பட்டோர் தொகையில் காணாமற்செய்யப்பட்ட ஈழத் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது; அப்படிச் சேர்த்துக் கொண்டால், சிறிலங்கா அரசு சாகச்செய்த ஈழத்தமிழர் தொகை பெரிதும் உயர்ந்து விடும்.

”சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” என்னும் தொடர் பரப்புரைக் காணொலிகளில் இது முதலாவது காணொலி ஆகும். இது ஆங்காங் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் எடுத்துக்காட்டுகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆங்காங் மக்களுடன் திரும்பத் திரும்பத் தோழமை தெரிவித்துள்ளது. அவர்களோடு திரையைப் பகிர்ந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறது. “சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” இயக்கத்தின் வரவிருக்கும் காணொலிகளில் கட்டலோனியர்கள், தைவானியர்கள் போன்றோரின் விடுதலைப் போராட்டங்களும் இடம்பெறும்.

ஈழத் தமிழர்களும் ஜனநாயகம், சுதந்திரம், நீதி என்பனவற்றை ஆதரிக்கும் அனைவரும் “சண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக” எனும் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படச் செய்வது அவசர அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக முகநூலில் இவ்வியக்கத்துக்கு ஆதரவு காட்ட வேண்டும். ஊடகங்களும் பொதுக் கருத்து முன்னோடிகளும் செல்வாக்குடைய நிலைகளில் இருப்பவர்களும் ஈழத்தமிழர்கள் (ஆங்காங்கியர், கட்டலோனியர், தைவானியர், மற்றுமுள்ளோர் போல்) ஒரு கடும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையில் உள்ளனர் என்பதை மட்டுமல்லாமல். இந்த நெருக்கடிக்குத் தீர்வு மேலும் சண்டையிடுவதல்ல என்பதையும் புரிந்து கொள்ள இது உதவும். ஆகவே குடிமக்களின் முன்முயற்சிகள், ஏற்புடைத்த பன்னாட்டு நெறிமுறைகள், நடைமுறைகளின் படி நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு ஆகிய நேரடி ஜனநாயகத்தின் அமைதிவழிப் பயன்பாட்டையே ஈழத் தமிழர்களாகிய நாம் கோருகின்றோம்.

- ஆபேல்

Pin It