சாக்கடை அள்ளுபவன் கைச்சுத்தம்
சுயமாய் சமைத்துண்ட கழிவறை கழுபவன்
கடற்காற்று சுவாசித்த செப்டிக் டேங்க் கூலி
சூரிய நமஸ்காரம் செய்த சுரங்க அடிமை
நான்காவது மாடியின் பூச்சில் தவறிவிழுந்து
இறந்த கட்டிடத் தொழிலாளியின் ஈமக்கிரியை
செரியாது உண்டு வள‌ர்ந்த விவசாயக்கூலி தொப்பை
குடும்பச் சுமை இறக்கி வைத்த சுமைக்கூலி
காய்காய்த்த கைகளின் வருடலில்
சிலிர்த்துப் போன கல்லுடைப்பவன் மனைவி
ஒயரை விடுத்து எலும்பு கடித்த எலெக்ட்ரீசியன்
செலவிலாது நடந்த மகள் திருமணத்தில்
வயிறு குளிர்ந்த உருக்காலைத் தொழிலாளி
காற்றில் மிதக்கும் இசைத் தேனைப்
பருகி அயர்ந்த பஞ்சாலைத் தொழிலாளி
என ஏதுமிராத நாளொன்று
தலைவர்களின் வாழ்த்துதலில்
கடந்து போனது.

- சோமா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.