மக்கள் தொகையில் அளப்பரிய வளம் கண்ட நாடு!
இக்கால பொருளாதாரச் சிந்தனைக்கு...
கேள்விக்குறிகளால் நிறைந்த நாடு!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்தச் சகத்தினை அழித்திடுவோம் எனவியம்பி
நாட்டின் வளமைக்கு கோடிட்டுக்காட்டினான் பாரதி!
தன்னிறைவில் இன்னும் இலக்கை எட்டாத
பின்னடைவில் உள்ளதே நம்நாடு!
புரட்சி விதைத்தப் பெரியாரை மறந்ததே நாடு!

எண்ணங்களால் வண்ணங்கள் காணலாம்!
வண்ணமயமான வாழ்வு வேண்டுமெனில்
திண்ணிய இலக்கோடு பகுத்தறிவும் வேண்டுமிங்கே!
திட்டமிடல் செயலாக்கப் படவேண்டும்!
ஏட்டளவில் சொல்லளவில் இருப்பதாலே
எட்டாக்கனியானது தனிமனித மேம்பாடு!
நாற்காலியில் அமர்ந்தால் மட்டும் போதுமா?
நற்செயல்கள் ஆற்றிட வேண்டாமா?

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!
ஒட்டிய வயிறுக்கு சோறிட்டுப் பசியாற்ற முடியும்!
பிற்போக்கு எண்ணங்களால் மந்தபுத்தி தலைமைகள்
தற்குறியாய் வாழ்வதாலே பொலிவிழந்து போனது நாடு!
நெஞ்சம் நிமிர் ... மூடத்தன செலவினங்களைப் பொசுக்கு!!
திட்டமிடும் முன்பே பொருளாதாரத்தை ஆய்வு செய் !
புதுமை புகுத்தும் முன்பே அறிவார்ந்து திட்டமிடு!
பகுத்தறிவால் மண்மீது புத்துலகம் காண்!

- கா.ந.கல்யாணசுந்தரம்

Pin It