தேவையான பொருட்கள்

தண்ணீர் ஊற்றும் கண்ணாடி ஜக் மற்றும் ஒரு நியூஸ் பேப்பர்

மேஜிக் செய்யும் முறை

கண்ணாடி ஜக்கில் நிறைய பால் வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் காண்பித்து இதில் உள்ள பாலை இதோ இந்த பேப்பரில் ஊற்றி காட்டுகிறேன் என்று சொல்லவும்.

ஒரு முழு நியூஸ் பேப்பரை இரண்டு பக்கமும் திருப்பி காட்டவும். பிறகு பேப்பரை கூம்பு வடிவில் மடித்து சுற்றி அதில் ஒன்றும் இல்லை என்று காட்டவும். பிறகு ஜக்கில்  உள்ள பாலை கூம்பு வடிவ பேப்பரில் வாய் பகுதியில் ஊற்றவும். கோப்பையில் பால் குறைந்து விடும். பின் கீழே வைத்துவிட்டு மந்திரம் போடுவது போல் செய்யவும். தற்போது பேப்பரை கவிழ்த்து விரித்து காண்பிக்க பால் மாயமாய் மறைந்து விடும்.

மேஜிக் இரகசியம்

கண்ணாடி ஜக்கின் உட்பகுதியில் சரியாக பொருந்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஜக்கின் வாய் பகுதி உயரத்திற்கு வெட்டி எடுத்து அடி பகுதியில் பசை தடவி ஜக்கின் உள்பகுதியில் ஒட்டவைத்து விடவேண்டும். இரண்டுக்கும் இடைபகுதியில் கொஞ்சம் பால் ஊற்றினால் அது முழுவதும் இருப்பது போல் தோன்றும். ஜக்கை கொஞ்சம் கொஞ்சமாக சாய்த்தால் பால் குறைந்து விடும்.

குறிப்பு: இதைத் தனியாகச் செய்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை பேப்பர் கூம்பில் ஊற்றும் போது வாய் பகுதி பார்வையாளருக்குத் தெரியாதவாறு பேப்பரை பிடித்துக் கொள்ள வேண்டும்.

Pin It