என் கை கீழே: உன் கை மேலே
ஒரு பார்ப்பன யாசகக்காரன்: ஐயா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணியமுண்டு.
பிரபு: போம் வோய், போய் எங்காவது பாடுபடுமேன். மண்ணு வெட்டினாலும் தினம் 8அணா சம்பாதிப்பீரே. கொட்டாப்புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்கு வறீரே வெட்கமில்லையா?
யாசகக்காரன்: என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகி விட்டது, என் கை கீழாகி விட்டது என்ன வேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும்.
பிரபு: மேலென்ன, கீழென்ன. இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர். கடையில் 10அணா போட்டால் ஒரு ஜர்மன் (க்ஷவரக்) கத்தி கிடைக்கும். வாங்கிக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர் தலைக்கு மேல் உம்ம கை போகுது பாரும். உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கின்ற பொறாமை.
யாசகக்காரன்: சரி நான் போய் வருகிறேன். பகவான் இப்படி தங்களைச் சொல்ல வைத்தான், நம்மளைக் கேள்க்க வைத்தான். தங்களை நொந்து என்ன பயன்.
பிரபு: அப்படியானால் அடியுமே அந்த பகவானை. போம் போம் சோம்பேரியே.
(பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் செப்டம்பர் 1935)