தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த ஆனந்த லாகிரியில் மெய் மறந்து பேசிய பேச்சு.

"எனக்குள் சில சமயங்களில் பிராமணர் பிராமணரல்லாதார் என்கின்ற உணர்ச்சி வந்தது. ஆனால் இப்போது அது மறந்து போயிற்று."periyar 551"பிராமணரல்லாதார் எனக்குச் செய்த இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்."

"என் சரீரத் தோலை உரித்து பிராமணரல்லாதாருக்கு செருப்பாய் தைத்துப் போட்டாலும் கூட அது சரியான நன்றியாகாது" என்று பேசி யிருக்கிறார். லாகிரி தீர்ந்தால் என்ன பேசுவார் என்று எழுத வேண்டுமா?

(பகுத்தறிவு செய்திக் குறிப்பு 18.11.1934)

தோழர். ஜே.என்.இராமநாதன்

பார்ப்பனரல்லாத மக்களின் நலத்திற்காக உழைத்து வந்த தோழர் ஜே.என். இராமநாதன் அவர்கள் 15.11.34 ல் சென்னையில் மரணமடைந்தார் என்பதை அறிந்து வருந்துகிறோம். நமது அனுதாபத்தை அவர் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேம்.

(பகுத்தறிவு இரங்கல் செய்தி 18.11.1934)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.