periyar 234நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும், இயக்கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும், கோயமுத்தூர் மகாநாட்டுக்கு காரியதரிசியாய் இருந்தவரும், தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்திற்கு காரியதரிசியும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத்திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது உண்மை நண்பர் திரு. கோவை, நெய் மண்டி கிருஷ்ணசாமி பிள்ளை அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப்படத்தக்க சம்பவமாகும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும் மற்றொரு நண்பரை கோவையில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல வேண்டும். அவர்களின் அருமை மனைவியாருக்கும் தாயாருக்கும் தம்பிமார்களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம் ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - இரங்கல் செய்தி - 16.12.1928)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.