periyar sivaji and kannadasan‘தமிழ்நாடு’ பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச்சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியிருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘தமிழ்நாடு’ தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப் பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல்லுவதும் இல்லை. ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் சர்க்கார் 23.3.28ல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை இந்த இரண்டு வருஷமாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கைகளைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள். இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலுவின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின் கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.