மாநாடுத் தீர்மானங்கள்

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை, உணவு பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் மக்கள் நலனை புறக்கணித்து ஜனநாயக விரோதப் பாதையில் செல்லும் திமுக அரசுக்கு மக்கள் எழுச்சி மூலம் பாடம் புகட்ட வேண்டுமென டிஒய்எப்ஐ மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

சமச்சீர் கல்வி, தனியார் பள்ளி கட்டணம், தனியார் பொறியியல் கல்லூரி கட்டணம் என கல்வித்துறையில் திமுக அரசின் அனைத்து அறிவிப்புகளும் முழுத்தோல்வி அடைந்துள்ளன. அதிகரித்து வரும் பெற்றோர்களின் துயரத்தால் தன்னெழுச்சியான போராட்டத்தை தமிழகம் தினந்தோறும் கண்டு வருகிறது. கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாகவே திமுக அரசு நடந்து கொள்கிறது.

69லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கையில் அரசாணை எண் 170ஐ பிறப்பித்து வேலைவாய்ப்புக்கு தடை பிறப்பித்த திமுக அரசு தற்போது வரை காலியாக உள்ள சுமார் 5லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர், பள்ளி தொகுப்பூதிய ஆசிரியர் என பட்டதாரிகளின் உழைப்பை சுரண்டும் அரசு, அரசுப்பணி நியமனங்களில் ஊழலை பெருமளவில் வளர்த்துள்ளதை இம்மாநாடு சாடுகிறது.

தமிழக அரசு சார்பில் புதிய தொழிற்சாலைகளை திறக்க மறுக்கும் அரசு பன்னாட்டு நிறுவனங்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அனுமதித்து தமிழகத்தின் இயற்கை வளத்தையும், உழைப்பையும் சுரண்டுவதற்கு வித்திட்டுள்ளது. 8 மணிநேர வேலை, நிரந்தரப் பணி, ஓய்வூதிய சலுகைகள் என அனைத்தையும் குழிதோண்டி புதைக்கும் திமுக அரசு, முறைசாரா தொழிலாளர்களின் நலவாரியங்களையும் செயல்படவிடாமல் முடக்கி வைக்கிறது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் அரசு ஹ¨ண்டாய், விஸ்டியான் போன்ற தொழிலாளர் போராட்டங்களை கடும் அடக்ககுமுறை கொண்டு அடக்கி பன்னாட்டு நிறுவனங்களின் பாசக்காரராக திமுகவை காட்டிக்கொண்டுள்ளது. மறுபுறம், நலவாரிய பயன்களை தாமதப்படுத்துவதன் மூலம் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு ஆட்படும் நிர்பந்தத்தை முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்திய அரசு, கட்டுப்பாடற்ற டாஸ்மாக் வியாபாரத்தின் மூலம் அவர்களின் வாழ்நிலையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

மாணவர்கள், தொழிலாளர்கள், ரெட்டணை விவசாயிகள், வாலிபர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் போராட்டங்களையும் காவல்துறையை கொண்டு அடக்க முயற்சித்த தமிழக அரசு, ஏராளமான பொய் வழக்குகளையும் புனைந்து, பலரை பணிநீக்கமும் செய்துள்ளது.

உத்தப்புரம், காங்கியனூர், குடியாத்தம், பழையபட்டனம் உள்ளிட்ட போராட்டங்களில் மட்டுமல்லாது, உமாசங்கர் ஐஏஎஸ் இடைநீக்கம், துணைவேந்தர் மீது தாக்குதல், சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்ககுதல் என தலித் விரோத பாதையில் தீவிரமாக செயல்படும் தமிழக அரசு தீண்டாமைக்கு எதிராக எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இம்மாநாடு குற்றம்சாட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக தொடர்ந்து உயர்த்திய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு, விலை நிர்ணயிப்பதில் சந்தையின் முடிவுக்கு அனுமதி அளித்ததன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. ஆவின் பால் விலை உயர்வு, சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, மறைமுக போக்குவரத்து கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து வகைகளிலும் விலையை உயர்த்தி தமிழக அரசும், தன்பங்குக்கு மக்களுக்கு பரிசு அளித்துள்ளது.

மேலும், ரேசன் கார்டுகளை ரத்து செய்வது, புதிய கார்டுகளை தர மறுப்பது, மண்ணெண்ணெய் அளவை குறைப்பது என பொது விநியோக திட்டத்தை சூறையாடும் திமுக அரசு, உணவுப்பாதுகாப்பில் ஏழைகளுக்கு எதிராகவே நடந்து வருகிறது. உணவுக்கிடங்கில் வீணாகும் உணவை எலிக்கு உணவாக்கினாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், ஏழைக்கு தர மாட்டேன் என கோபம் கொப்பளிக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகக் கிளையாக செயல்படும் திமுக அரசு சேதுசமுத்திர திட்டத்திலும் தமிழகத்திற்கு துரோகமே செய்துள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ் திட்டம், கண்ணொளி காப்போம், சிறுவர்களுக்கான இருதய மாற்று சிகிச்சை திட்டம் மற்றும் கலைஞர் காப்பீடு திட்டம் என சுகாதாரம் குறித்த அரசின் அணுகுமுறை தனியார் மருத்துவமனைகளை ஆதரிக்கும் விதத்திலேயே உள்ளது. கலைஞர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெறும் சூழலில் நியாயமான மருத்துவ சிகிச்சைக்கு சலுகை மறுக்கப்படுவதும் அதிகரிக்கிறது.

அனைத்து வகைகளிலும் மக்கள் நலனை புறக்கணித்துள்ள திமுக அரசு தேர்தலை சந்திக்க பணத்தை மட்டுமே நம்பி ஜனநாயகத்தை விலை பேச தயாராகி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது. ஜனநாயகம் காக்கும் உரிமைப் போரில் மக்கள் நலனை புறக்கணித்த திமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

தமிழகத்தில் 4 ஆண்டுகாலமாக தொடரும் மின்வெட்டு திமுக அரசின் மெத்தனப் போக்கை டி.ஒய்.எப்.ஐ மாநாடு கண்டிக்கிறது. 

பருத்தி ஏற்றுமதியை தடை செய்

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் தமிழில் வினாத்தாள் வழங்க வலியுறுத்தி.

கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் ஈவ்டீசிங், ராகிங் போன்ற வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடு.

முழுமையான சமச்சீர் கல்வி அமல்படுத்த வலியுறுத்தல்.

தமிழக மலைவாழ் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த வலியுறுத்தி.

புதுச்சேரியில் 5000 காலிப்பணியிடங்களை நிரப்பவும் வேலையில்லாக்கால நிவாரணம் வழங்கு.

தமிழக அரசு துறைக்கான புதிய வேலை வாய்ப்புக் கொள்கை உருவாக்கக் கோரி தீர்மானம்.

வங்கி காலிப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்த டி.ஒய்.எப்.ஐ மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழக தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமான சேது சமுத் திரத் திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தித் தீர்மானம்.

திமுக அரசின் காவல்துறை அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு டி.ஒய்.எப்.ஐ மாநாட்டில் கண்டனம்.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் குறைத்திடு.

தலித் விரோத திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்.

இலவச குடிமனைப்பட்டா, இலவச நிலம் வழங்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்த டி.ஒய்.எப்.ஐ மாநாடு வலியுறுத்தல் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை உரிமை களை பாதுகாக்கக் கோரி டி.ஒய்.எப்.ஐ மாநாடு வலியுறுத் தல் அதிகரித்து வரும் புவிவெப்பமயமாதல் உள்ளூர் அளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க டி.ஒய்.எப்.ஐ மாநாடு வலியுறுத்தல்

நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் பெண் களுக்கு 33சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிடு.

தனியார் கல்வி கட்டண வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திடுக 2010 அக், 9 பெற்றோர்கள் போராட்டத்திற்கு ஆதரவு.

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறுகிற கழிவு நீர் கலப்பதை தடுத்திடு.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்.

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி நடைபெறும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டிற்கு ஆதரவு..

அமராவதி, திருமூர்த்தி அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் ஆதாரத்தை உருவாக்கி விவசாயத் தையும், குடிநீரையும் பாதுகாத்திடு.

தொலைதொடர்புத் துறையான பிஎஸ்என்எல் யை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடு.

தமிழகத்தில் மறைமுகமாக ஏற்றப்பட்டுள்ள போக்கு வரத்துக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூருக்கு ரயில் பாதை அமைத்து, பயணிகள் ரயில், சரக்கு ரயில் இயக்க வலி யுறுத்தல்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2வது பில்லூர் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்று.

தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையாக உருவாகியுள்ள குளச்சல் பகுதியில் வர்த்த துறைமுகம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் சாலைகள் விரிவாக்கத்தின் போது, சாலையையட்டியுள்ள இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்திடு.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சாயக் கழிவுகள் ஆற்றில், குளத்தில் கலந்து வருகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விவ சாய நிலங்களையும், குடிநீரையும், பாலாறையும் பாது காத்திடு.

ஊர்ப் பெயர்கள் மற்றும் வீதிப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வலியுறுத்தல்.

தமிழகத்தில் 2 லட்சம் சிறுபான்மை மாணவர்கள் 20092010 கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை பெறு வதற்கான மனு கொடுத்துள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று அரசு கூறி யுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிடு.

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரை அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடு.

தலித் கிறிஸ்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கிடு.

Pin It