Ambedkar

போதபத்தரின் கேள்விகளுக்கு புத்தர் பின்வருமாறு பதிலளிக்கிறார்: "போதபத்தரே! உங்களுடைய கேள்விகளுக்கு எந்த விதமான பதிலையும் நான் தர விரும்பவில்லை.''

புத்தர் ஏன் எவ்வித பதிலையும் போதபத்தரின் கேள்விகளுக்குத் தரவில்லை? போதபத்தரின் கேள்விகள் பயனற்ற கேள்விகள். தம்மம், நன்னடத்தை, பற்றற்று வாழுதல், தீமையில் இருந்து தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல், மன அமைதி அடைதல், மெய்யறிவு பெறுதல், மனிதனின் அகம் நோக்கிப் பார்த்தல் மற்றும் உன்னதம் அடைதல் போன்ற கேள்விகளை போதபத்தர் எழுப்பவில்லை. எனவே, நான் அவருடைய கேள்விகளுக்கு எத்தகைய பதிலையும் தர விரும்பவில்லை என புத்தர் கூறினார்.

மேலும், புத்தருக்கும், கோசல நாட்டு மன்னன் பசநந்திக்கும் இடையே நடந்த உரையாடலை இங்கு தர விரும்புகிறேன். "அரசர்களுக்கிடையிலும் பண்பாளர்களுக்கிடையிலும், பார்ப்பனர்களுக்கிடையிலும் இல்லத்து ஒழுகும் மக்களிடையிலும், தாய் - மகன் இடையிலும், மகன் - தந்தை இடையிலும், சகோதரன் - சகோதரிக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் எப்பொழுதுமே முரண்பாடுகள் உருவாகி வருகின்றன'' என்று பசநந்தி, புத்தரிடம் முறையிடுகிறார். பசநந்தியின் வார்த்தைகளை புத்தர் மறுதலிக்கவில்லை. பசநந்தியின் வார்த்தைகள் சமூகத்தின் பிரதிபலிப்பு என்பதை புத்தர் உணர்ந்திருந்திருந்ததே இதற்கான காரணமாகும்.

புத்தரின் பதில் என்ன? "வருத்தமும், துன்பமும் இந்த உலகில் உள்ளது. துக்கத்தின் மூலம் எது? துக்கத்திற்கு தீர்வு என்ன? துக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான வழி என்ன'' என்று ஆராயுமாறு புத்தர் கூறுகிறார். காரணம், இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான் சமூகத்திற்கான பயன் அடங்கியுள்ளது. மனித சமூகம், உன்னதம் அடைவதற்கான வழிமுறை அடங்கியுள்ளது.

"சமூகத்தின் துன்பத்திற்கு சுரண்டல்தான் காரணம் என்ற மார்க்சின் வாதத்தை நாம் ஆதாரமாகக் கொண்டால் கூட, புத்தர் காரல் மார்க்சின் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்றுவிடவில்லை.

"துக்கத்திற்குக் காரணம் சொத்துடைமை. ஆனந்தா! இதை நீ உணர வேண்டும். பொதுவுடைமை என்பது துக்கத்திற்கு தீர்வைத் தரலாம். ஆனால், பொதுவுடைமை மட்டுமே துக்கத்திற்கான முழுத்தீர்வையும் தர முடியாது. பொதுவுடைமைத் தத்துவம், எவ்வித சொத்தையும் தனக்கென சேர்த்துக் கொள்ளாததில் இருந்து தொடங்குகிறது. இது, துறவிகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம்.

ஆனால், பிக்குகள் கூட எட்டு தனிச் சொத்துகளை கைக்கொண்டிருக்கலாம் என புத்தர் வரையறுக்கிறார்:

3. நாள்தோறும் அணிந்து கொள்ள மூன்று துவறாடைகள் அல்லது ஏதேனும் உடை 4. நடந்து செல்ல ஆதாரமாக ஒரு இருப்புக் கழி 5. பிச்சைப் பாத்திரம் 6. சவரம் செய்யும் கத்தி 7. ஊசி 8. தண்ணீர் வைத்துக் கொள்ள பாத்திரம்.

வெள்ளி, தங்கம் போன்றவைகளை பிக்குகள் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. சொத்துடைமை எட்டு பொருட்களில் மட்டுமே வரையறை செய்யப்பட்டிருந்தது. இந்த விதிகள் ‘ரஷ்யாவின் கம்யூனிச' விதிகளைக் காட்டிலும் கடுமையானதாகக் காணப்படுகிறது.

நாம் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். புத்தர் கொண்டு வந்த ‘பொதுவுடைமை' ன்று படிநிலைகளைக் கொண்டது. முதலாவதாக, பஞ்ச சீல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல். புத்தர் அடைந்த மெய்யறிவு' அவருக்கு சமூகத்தின் பிரச்சினைகளைத் தெளிவாக உணர்த்தியது. "உலகத்தில் துன்பமும், வருத்தமும் நிரம்பியுள்ளது' என்பதே புத்தர் தத்துவத்தின் மய்யம்.

இந்தத் துன்பத்திற்கும், வருத்தத்திற்கும் உடனடித் தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகும். உலகில் துன்பம் நிலவுகிறது. துன்பத்திற்கான தீர்வு இருக்கிறது. தீர்வுக்கான வழிமுறை இருக்கிறது. இம்மூன்றையும் தத்துவமாக புத்தர் மக்களுக்குத் தந்தார். துன்பத்திற்கான காரணங்கள் என இரண்டை புத்தர் வகைப்படுத்துகிறார். அவை என்ன?

(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 445)

Pin It