பிலிம் நெகட்டிவ்களில் காணப்படும் முகத்தை நம்மால் சரியாக அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை. பிரபலமானவர்களின் முகங்கள்கூட அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது. எம் ஐ டியைச் சேர்ந்த சின்கா என்பவர் ஒரு விளக்கத்தைத் தருகிறார்.

பொதுவாக நெற்றி கன்னம் ஆகிய இடத்தைவிட கண்களின் பகுதி கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும். இதற்கு பழகிவிட்ட நமது மூளையானது ஃபோட்டோ நெகட்டிவில் கண்கள் பகுதி வெளிச்சமாக இருப்பதைப் பார்த்து திணறுகிறது.

இருக்கட்டும் இந்த நெகட்டிவில் காணப்படும் பிரமுகர் யார் என்று தெரிகிறதா? நடிகர் கமல்ஹாசன் தான்.

- முனைவர் க.மணி

 

Pin It