பல செயலிகளை ஒரே நேரத்தில் கணினியில் பயன்படுத்துபவரா நீங்கள்?  கணினியின் வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது;  அதன் செயல் வேகத்தைக் கூட்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?  கவலையை விடுங்கள்.  கீழுள்ள படிநிலைகளைக் கையாண்டு உங்கள் கணினியின் வேகத்தை எளிதாகக் கூட்டி விடலாம். இப்பதிவில் உள்ள படங்கள் ‘விண்டோசு ஏழு’ இயங்குதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.  பிற இயங்குதளங்களுக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘Start’ பொத்தானை அழுத்தி வரும் பட்டியில் ‘Computer’ (பிற இயங்கு தளங்களில் My Computer) என்பதன் மேல் வலப்புறம் சொடுக்குங்கள். 

windows_373
 
அப்பட்டியலில் ‘Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.  வரும் பக்கத்தின் கீழ் இடப்புறத்தில் ‘Performace Information and Tools’ என்னும் சுட்டி இருக்கும்.  அதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  (பிற தளங்களுக்கு: ‘Properties’ என்பதன் பின் ‘System Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)windows_151

இப்போது நீங்கள் பார்க்கும் பக்கத்தின் மேல் இடப்புறத்தில் ‘Adjust visual effects’  என்னும் இணைப்பு இருக்கும்.  (பிற தளங்களுக்கு: ‘System Properties’ பெட்டியில் ‘Advanced Tab’ என்னும் தத்தலைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  அதில் ‘Performance’ -> Performance Options -> Visual Effects’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)

இப்போது கீழுள்ளது போலப் பெட்டி தோன்றும்.  அதில் படத்தில் இருப்பது போல ‘Adjust for best performance’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Apply’ மற்றும் 'Ok' கொடுத்து விடுங்கள்.  

windows_358

பிறகென்ன உங்களுடைய கணிப்பொறியின் வேகத்தை ஓரளவு இப்போது நாம் கூட்டிவிட்டோம்.

- க.பரணிதரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
Kavitha.G
Hi Barani, It is really useful to everyone... Thank you very much for your service. Am expecting your service to be continued.
அ சகன்
ஐயா,

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பெர்ஃபார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பாக்ஸை செலக்ட் செய்து, ஒகே பட்டனை க்ளிக் செய்தேன். கம்ப்யூடரில் "ப்ளீஸ் வெய்ட்" என்று மெஸேஜ் வந்து கடந்த மூன்று நாட்களாக அதிலேயே நிற்கிறது. அத்துடன் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் கலரெல்லாம் போய் கறுப்பு வெள்ளையாகி விட்டதுடன், எதை படித்தாலும் தலை வலியும் வருகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள்.

அ சகன்
பரணி
அ சகன்,
முன்பு போலவே பெர்ஃபார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் திரைக்கு சென்று, ‘Adjust for best performance’ என்பதற்க்கு பதிலாக, முதல் விருப்பமான 'Let Windows choose what's best for my computer' என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Apply’ மற்றும் 'Ok' கொடுத்து விடுங்கள். இது உங்கள் கணினியை பழைய நிலைக்கு கொண்டு செல்லும் மற்றும் இனி தலை வலி இதனல் வராது.
கலைமணி.க
அய்யா இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் டேட்டா வேலிடேசன் பற்றி எழுதடவும். நன்றி
கலைமணி.க

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.