light_200பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம் அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணிநேரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா?!!!

இந்த பழமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட்என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம். அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம்.

pulb_200அதுமட்டும் இல்லாது இதே போன்ற விளக்கை இனி வரப்போகும் எந்த மனிதராலும் உருவாக்க இயலாது என்றும் அவரின் குறிப்பில் எழுதி இருந்தாராம். இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அந்த குழுக்கள் கொடுத்த அறிக்கையில் இப்பொழுதைய நிலையில் இந்த விளக்கை உருவாக்குவது என்பது சாத்தியமற்றது என்று கூறி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்த விளக்கில் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கும் என்று.

அடோல்ப் சைலெட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மின் விளக்கு முதன் முதலில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நூற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம். இந்த அதிசயத்தை பார்க்கவரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
vetri chelvan 98948 99510
அருமையான தகவல். நன்ரி நன்பரே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.