“சார்... ஒரு நிமிஷம்... எங்க மேனேஜிங் டைரக்டர் லைனில் இருக்கிறார், உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறார்'' என்று தொலைபேசியில் குரல் ஒலித்தது. நான் காத்திருந்தேன், “சார், நான் சேகர்… நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பேசுகிறேன், நீங்கள் சொன்ன குறை என் கவனத்திற்கு வந்தது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இனி இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், மனம் திறந்து உங்கள் குறையை எடுத்துச் சொல்லியதற்கு நன்றி, இனி சிறப்பாக நாங்கள் செயல்படுவதற்கு உங்கள் ஆலோசனை உதவியாக இருக்கும்'' என்றது மறுமுனையில் அந்தக் குரல்.

அது மேனேஜிங் டைரக்டர்தானா என்பது எனக்குத் தெரியாது என்றாலும் என்னைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டவுடன் எனது கோபம் திடீரென்று மறைந்தது. மாறாக அனுதாபம்தான் பிறந்தது.

நாட்டிங்காம் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் ஒரு நிறுவன நஷ்ட ஈடு கொடுத்து வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவதைவிட மன்னிப்பு கேட்பது மிகவும் செலவு குறைவானது என்று சொல்கிறது. மனிதருக்கு ஒரு சுபாவம் உண்டு, யாராவது மன்னிப்பு கேட்டுவிட்டால் உடனே அதை மன்னிப்பதுடன் மறந்தும் விடுவது.

மன்னிப்பு கேட்பதன் மூலம் நல்ல வாடிக்கையாளரை நிறுவனம் இழப்பதில்லை.

-முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It