..எஸ் தேர்வுக்கு முக்கியமாக இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது பிரிலிம்ஸ். மற்றொன்று மெயின்ஸ். இதில் பிரில்ம்ஸ் என்பது ஸ்கிரீனிங் டெஸ்ட் மாதிரிதான். இதற்கு புவியியல், வரலாறு.. இப்படிப்பட்ட 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘ஜெனரல் ஸ்டடிஸ்என்றும் ஒரு பேப்பர் இருக்கிறது. இதில் நம் நாட்டின் இப்போதைய நடப்புகள், இந்திய அரசியல், வரலாறு இப்படி பல துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மதிப்பெண்ணைக் கொண்டுதான் மெயின்ஸ்க்கு தேர்ந்தெடுப்பார்கள். மெயின்ஸில் இரண்டு தேர்வுகள் உண்டு. முதலாவது எழுத்துத் தேர்வு. இதற்கென முதலில் சொன்ன 27 சப்ஜெட்டுகளில் இருந்து ஏதாவது இரண்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிரிலிம்ஸில் எடுத்த சப்ஜெக்டையே மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதையே தேர்வு செய்தாலும் பரவாயில்லை. இந்தத் தேர்வோடு ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு மாநில மொழியில் தேர்வு எழுத வேண்டும். அதில் போதுமான மதிப்பெண் வாங்கினால்தான், மெயின்ஸில் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்துவார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டி வரும். இதில் பர்சனாலிட்டி, பேசும் திறன் எல்லாமே உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

டிகிரி எந்த சப்ஜெக்டில் படித்தாலும், பிரிலிம்ஸ் தேர்வுக்கு அதே சப்ஜெக்டைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எதில் விருப்பம் இருக்கிறதோ, எந்த சப்ஜெக்டுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறதோ அதை எடுத்துப் படிக்கலாம். U.P.S.C. கேள்விகளைத் தேர்வு செய்யும் குழு, மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை கேள்வி எளிதாக இருந்தால் மறுமுறையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த சப்ஜெக்டில் நீங்கள் ஸ்டிராங்கோ, அதைத் தேர்வு செய்வது நல்லது.

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)

Pin It