1) கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்ற மக்களின் கருத்து அறிவியல் அடிப்படையில் சரியான கருத்தாகும். உடனடியாக அதனை செயல்பட வைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தினரின் கருத்து அறிவியலுக்குப் புறம்பான ஒன்றாகும். இந்தக் கருத்தினை எவ்வித மறு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நடைமுறைப்படுத்தினால் அது அந்த மின் நிலையத்திற்கும், மக்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்விற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் மிகப்பயங்கரமான சவாலாக அமையும் என்பதை உறுதியுடன் கூற முடியும்.
2) கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அமைவிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமும், அதன் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் நிர்வாகத்தால் ஆய்வுக்குட் படுத்தப் பட்ட விதமும் தேச மற்றும் சர்வதேச அறிவியல் ஆய்வு மரபுகள் மற்றும் சட்டங்களை முற்றிலுமாக புறந்தள்ளுவதாக உள்ளன.
3) கூடங்குளம் அணுமின் நிலயத்தின் அமைவிடம் குறித்த ஆய்வுகளை முறைப்படி மேற்கொள்ளாமலேயே இரண்டு அணு உலைகளை அணு சக்திக் கழகம் கட்டி முடித் துள்ளது. இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த புக்குஷிமா அணு உலை விபத்தானது, முறைப் படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் அணு உலைகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சின்னைகளை கண் கூடாக விளக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
4) புக்குஷிமா போன்ற விபத்து கூடங் குளத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்று அணுசக்திக் கழகம் கூறுவது சரியே. ஏனெனில், அதையும்விட மோசமான விபத்துகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படுவ தற்கான அறிவியல் அடிப்படையிலான அனைத்து வாய்ப்புகளும் இந்த அமைவிடத்தில் உள்ளது.
5) இந்த அமைவிடம் பிதுங்கு எரிமலைப் பாறைகளை (sub volcanic rocks) மிக அதிக அளவில் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அமை விடத்தின் அடித்தளக் கெட்டிப் பாறை மிகவும் மெலிந் துபோய் காணப்படுகிறது. 40,000 மீட்டர் தடிமனைக் கொண்டிருக்க வேண்டிய கூடங்குளம் அமை விடத்தின் கண்ட மேலோ டானது, பல இடங்களில் வெறும் 150-_200 மீட்டர் தடி மனையே கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்கின்ற காலத்தில் அந்த விபத்தைக் கையா ளுவதற் காக அமைக்கப் பட்டிருக்கும் அவசரகாலக் கட்டுப் பாட்டு அறை (shielded emergency control room) மற்றும் டீசல் ஜென ரேட்டர் கட்டிடங்கள் ஆகி யவை அமைவிடத்தின் வடக்கு எல்லையில் அமைந் துள்ளன. இந்த இடத்தில்தான் பிதுங்கு எரி மலைபாறைகளால் (sub volcanic rocks) அடித்தள கெட்டிப்பாறையானது மேலதிகமான அளவில் மெலிந்து போயிருப் பதாகத் தெரிகிறது. ஆகவே, இந்த இடங்களில் பிதுங்கு எரிமலைப் பாறைகளின் செயல் பாட்டால் நில மேலோடு குழிந்து பள் ளமாகி விடுவதற்கோ அல்லது சிறிய அளவிலான எரிமலை வெடிப்பு ஏற்படுவ தற்கோ அதிக சாத்தியம் உள்ளதாகக் கருத வேண்டி யுள்ளது. விபத்து காலத்தில் இது போன்ற நிகழ் வுகள் இங்கு நிகழும் பட்சத்தில், அவசர காலக் கட்டுப் பாட்டு அறை மற்றும் கூடுதல் ஜென ரேட்டர்கள் இல்லாமல் விபத்தைத் தடுக்க யாரால் என்ன செய்ய முடியும்? (1)
6) கூடங்குளம் அணு உலைகளின் அடித்தளத்திற்காக 2001 ஆம் ஆண்டில் குழியைத் தோண்டியபோது 1990_-1998 ஆண்டுவரை அணுசக்தித் துறையால் மேற் கொள்ளப் பட்ட நிலவியல் ஆய்வுகளால் கண்டறியப்படாத உறுதி குறைந்த பாறைகள் கண்டறி யப்பட்டன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 15 மீட்டர் ஆழத் தைக் கொண்ட அந்த பாறை களைத் தோண்டி அகற்றிவிட்டு அந்தக் குழியில் சிமெண்ட் கலவை கொண்டு உறுதி செய்தார்கள் (consolidation cement grouting) . 1990-_98 ஆம் ஆண்டுகளில் மேற்ª காள்ளப் பட்ட நிலவியல் ஆய்வுகளின் அலட்சியத் தன்மையை சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் டாக்டர் கி.பூமிநாதன் 2004 ஆம் ஆண்டில் கரண்ட் சயின்ஸ் சஞ்சிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார். (2) கடைசி நேரத்தில் அதிகாரிகளால் கண்டறியப்பட்ட உறுதி குறைந்த பாறைகளே கூடங் குளம் அமைவிடத்தின் அடித் தளப் பாறைகளுக்குள் ஊடுருவி யிருக்கும் பிதுங்கு எரிமலைப் பாறைகளாகும்.
7) பிதுங்கு எரிமலைப் பாறைகளால் நிலத்தடி நீரின் மட்டமும், இயக்கமும் பாதிக்கப் படலாம் என்றும், இதனால் அணு உலைகளின் அடித் தளத்தின் உறுதியானது கேள்விக் குள்ளாக்கப்படலாம் என்றும் 2011 மே மாதம் சர்வ தேச அணுசக்திக் கழகத்தால் வெளியிடப்பட்ட “அணு உலைகளுக்கான எரி மலைப் பேரிடர்” ஆவணம் கூறுகிறது. இதன் காரணம், இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகள் காணப் படும் இடங்களை அமை விடமாகக் கொண்ட அணு உலைகளிலும், அணுப் பிளவு டன் தொடர்புடைய பிற ஆலைகளிலும் எரிமலை நிகழ்வு களினால் ஏற்படும் பேரிடர் குறித்த ஆய்வினை (Volcanic Hazard Analysis) மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆவ ணம் வலியுறுத்துகிறது.(3)
8) அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதியில் அமையவிருந்த அமெரிக்காவின் அணுக்கழிவுக் கல்லறைத் திட்டத்தை அமெரிக்க அரசு 2010 ஜூலை மாதம் கைவிட்டு விட்டது. இந்த அமைவிடமானது, கூடங் குளத்தில் உள்ள பிதுங்கு எரிமலைப் பாறைகளைப் போன்ற பாறைகளைத் தன்ன கத்தே கொண்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை இந்தப் பிதுங்கு எரிமலைப்பாறைகளால் அணுக்கழிவுக் கல்லறையின் இயக்கத்திற்கும், பாது காப் பிற்கும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா என்பதற்கான ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதற்காக சுமார் 10,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடைசியில் இந்தப் பிதுங்கு எரிமலைப் பாறைகளால் பிரச்சினைகள் வர வாய்ப்பு ள்ளது என்ற முடிவு எட்டப் பட்டது. அதன் நீட்டிப்பாக, அமெரிக்க அரசு திட்டத்தைக் கைவிட்டு விட்டது. (4)
9) யுக்கா மலைப்பகுதியை விட கூடங்குளம் அமை விடத்திற்குப் பிதுங்கு எரி மலைப் பாறைகளாலும், பிற எரிமலை நிகழ்வுகளாலும் அதிக அபாயம் உள்ளது என்பதை சமீபத்தில் நடந்த இயற்கை நிகழ் வுகளும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் உறுதி செய்கின்றன. (5)
10) கூடங்குளம் அமை விடத்தில் இருந்து 26, 66, 96 மற்றும் 156 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆனைக்குளம்-பாண்டிச்சேரி, அபி ஷேகப்பட்டி-திருப் பணிக்கரிசல்குளம், சுரண்டை மற்றும் சுக்கலி நத்தம் ஆகிய கிராமங்களில் 1998, 1999, 2001, மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் நடந்த சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் (small volume volcanic eruptions) போன்ற நிகழ்வுகளை அமெரிக்காவின் யுக்கா மலைப்பகுதி சந்திக்க வில்லை. என்றாலும்கூட அங்கு அமையவிருந்த “அணுக் கழிவுக் கல்லறைக்கு” எரி மலையினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிடர் ஆய்வு (volcanic hazard analysis) விரிவான முறையில், பல்வேறு ஆய் வாளர்களால் மேற் கொள் ளப்பட்டது. ஆனால், யுக்கா அமைவிடத்தைக் காட்டி லும் அதிக எரிமலை அபா யத்தைக் கொண்டிருக்கும் கூடங் குளம் அமைவிடத்திற்கு அப்படிப் பட்டதொரு ஆய்வு இன்றளவும் மேற்கொள் ளப்படவில்லை. இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால், அப்படிப் பட்ட ஒரு பிரச்சினை இங்கு இருக்கின்றது என்பதை, சுதந்திர மான அறிவியல் ஆய்வுகளால் இது பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அணுசக்தி நிர்வாகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவோ, அல்லது பேசவோ தயாராயில்லை என்பதுதான். இதற்காக உச்ச நீதிமன்றத்தை 2002 மே 20 ஆம் தேதியன்று மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு மக்கள் நாடியபோது, அன்று தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ஙி.ழி.கிர்பால் அவர் களால் மக்களின் வாதத்தை மறுக்க முடியவில்லை ; மாறாக, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இது மக்களின் எதிர்காலத்தைத் தீர் மாணிக்கும் பிரச்சினை என்று மக்களின் வழக்குறைஞர் திரு.வெங்கட்ரமணி அவர்கள் மேற்கொண்டு வாதிட்டபோது, மக்களின் சார்பாக வழக்கு தொடர்ந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்க்கண்டன் அவர் களுக்கும், நாகர்கோவில் விஞ் ஞானி டாக்டர் லால் மோகன் அவர்களுக்கும் 1000 ரூபாய் அபராதத்தை அந்த நீதியரசர் விதித்தார் என்பது எவரும் மறக்கக்கூடாத வரலாற்று நிகழ்வாகும்.
11) சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள் கூடங் குளம் அமைவிடத்தில் நடக் காது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகளை அணு உலை நிர்வாகம் இன்றளவும் மேற் கொள்ளவில்லை. இந்த நிகழ்வு களின் போது அவை நடந்த இடங்களில் நிலமானது சுமார் 4 மீட்டர் வரைக்கும் தாழ்ந்து போனதாக ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. மேலும் வெடிப் பின்போது எரிமலை முகவாய் களில் இருந்து மேலெறியப் பட்ட லாவாக் குழம்பும், எரிமலைக் கற்களும் அடுத் துள்ள மரங்களையும், கட்டு மானங்களையும் பாதிப் பதாக இருந்தன. எரிமலை முகவாயில் இருந்த வெப்ப மானது சுமார் இரண்டு நாட் களுக்குத் தனியாமல் இருந்தது என்றும் அறிக்கைகள் தெரி விக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வொன்று கூடங்குளம் அமைவிடத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படிப்பட்ட தொரு நிகழ்வு நடக்கும் பட்சத்தில் அணு உலைக்குக் கீழுள்ள நிலம் குழிந்து பள்ள மாகிப் போவ தையும், வெடிப் பிலிருந்து வெளி யேறும் லாவா மற்றும் எரி மலைக் கற்களையும் அணு உலை களால் எவ்விதப் பாதிப்பும் இன்றி தாங்கிட முடியுமா? இவற்றால் ஏற்பட வாய்ப்புள்ள தீ விபத்துகளை அணு உலைகளால் பாது காப்பான ரீதியில் எதிர்கொள்ள முடியுமா? இந்தக் கேள்வி களுக்கான பதிலைக் கண்ட டையவே சர்வதேச அணு சக்திக் கழகம் கூறும் “எரிமலைப் பேரிடர் ஆய்வு” கூடங்குளம் அமைவிடத்திற்கு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது.
12) தென் இந்தியாவிலேயே மிக அதிகமான நிலத்தடி வெப்பத்தைக் (sub crustal heat flow) கூடங்குளத்தில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகர்காவில் கொண்டுள்ளது என்பதை சுகந்தா ராய் குழுவினர் 2007 ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளனர். தென் இந்தியா வின் பிற பகுதி களைவிட இந்தப் பகுதியின் நில மேலோட் டிற்குக் கீழ் உள்ள மேக்மா வானது அதிகமான அளவில் மேலெழும்பியிருக்கிறது என்றே இதனைப் புரிந்துகொள்ள முடியும். (6) கூடங்குளம் அமைவிடத்திற்கு எரிமலைப் பேரிடர் ஆய்வு மேற் கொள் ளப்பட வேண்டும் என்ற தேவையை இந்தத் தகவலானது மேலும் உறுதி செய்கிறது.
13) கூடங்குளம் அணுமின் நிலையம் தன் அணு உலைகளுக்குத் தேவையான குளிர் விப்பான் நீர் அனைத் திற்கும் மன்னார் வளை குடாவை மட்டுமே நம்பியிருக் கிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று அணுசக்திக் கட்டுமானக் கழகம் முதல் இரண்டு அணு உலை களுக்குக் கொடுத்த அனுமதியில் - எக்காரணம் கொண்டும், அணு உலைகளுக்குத் தேவையான குளிர்விப்பான் நீருக்கு ஒற்றை நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத் துகிறது. (7) சர்வதேச அணு சக்திக் கழகமும் இந்தக் கருத்தைப் பல்வேறு ஆவ ணங்களில் வலியுறுத்துகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உலைக்கான முதன் மைக் குளிர்விப்பான் நீரை எடுப்பது அன்றைய திட்டம். பேச்சிப்பாறை அணையிலோ அல்லது அங்கிருந்து அணு உலைகளுக்கு வரும் குழாய்க ளிலோ பிரச்சினகள் ஏற் பட்டால் அதனை சமாளிக்கத் தேவையான நம்ப கமான மாற்று நீர் ஆதாரங்களைக் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் கண்டறிய வேண்டும் என்று அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகம் அறிவுறுத்தியது. பேச்சிப்பாறை அணை இல்லா விட்டால் கோதையாறு அணையில் இருந்தோ அல்லது நிலத்தடி நீரில் இருந்தோ அணு உலையின் நன்னீர்த் தேவையை நிறைவு செய்யும் திட்டத்தை அணுமின் நிலைய நிர்வாகம் முன்வைக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டின் இறுதி யில் திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பேச்சிப்பாறை அணையின் நீர் அணு உலைகளுக்கு உபயோ கப்படுத்தப் படமாட்டாது என்று அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்தபோது அவர் களிடம் அவசர கோலத் தில் இஸ்ரேல் நாட்டி லிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலமாக வாங்கப்பட்ட கடல் நீர் உப்பகற்றி ஆலையைத் (sea water desalination plant) தவிர வேறெந்த மாற்று நீராதாரமும் இல்லை! (8) என்றாலும்கூட, அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
14) பேச்சிப்பாறை அணையின் நீரை அணு உலைகளைக் குளிர்விப்பதற்கு உபயோகிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு சுமார் 20 ஆண்டு காலம் கழித்து அந்த அணை யின் நீரை உபயோகிக் கப் போவதில்லை என்ற அணுமின் நிலைய நிர்வாகி களின் முடிவு குமரி மாவட்ட மக்களின் எதிர்ப்பினால்தான் என்று அவர்கள் இன்று கூறு கிறார்கள். என்றாலும் கூட, அந்தக் கூற்றில் இருப்பது பாதி உண்மையே. 20 ஆண்டுகாலம் பேச்சிப்பாறையின் நீரை உபயோகிப்பது என்று அணு சக்தித் துறை கூறிக் கொண்டி ருந் தாலும்கூட, அந்த அணை யால் நிலையான அடிப் படையில் அணு உலைக ளுக்குத் தேவையான நீரை அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளை அணு மின்நிலைய நிர்வாகம் அந்த 20 ஆண்டு காலமும் மேற் கொண்டிருக் கவில்லை. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று திரு நெல்வேலியில் நடத்தப் பட்ட 3-6 அணு உலைகளுக் கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள் சார்பில் அரசிடம் அளிக்கப் பட்ட பேச்சிப்பாறை நீர் நிலை யினால் தொழில்நுட்ப ரீதியில் அணு உலைகளுக்கு எதிர் காலத்தில் ஏற்படப்போகிற பிரச்சினை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றின் பிறகே அந்த முடிவை அணுசக்தி நிர்வாகம் எடுத்தது. (9) இன்றளவும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகத்தின் அறிவியல் செயல்பாட்டு முறை இவ்வாறே தொடர்கிறது.
15) பேச் சிப்பாறை அணையின் நீர் ஆதாரம் குறித்த ஆய்வுகளை மேற் கொள்ள 20 ஆண்டுகளாக அணுமின் நிர்வாகம் எவ்வா றெல்லாம் மறுத்து வந்ததோ, அது போலவே மன்னார் வளை குடாவினால் கடல்நீர் உப்ப கற்றி ஆலைகளுக்குத் தொடர் ச்சியாகப் பிரச்சினைகள் ஏதுமின்றி நீரைக் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வுகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது மேற்கொள்ளத் தயாரா யில்லை. 1989 ஆம் ஆண்டு அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தால் கொடுக்கப்பட்ட அனுமதியில் கூடங்குளத்தின் கடலோரப் பகுதியில் கடல் அரிப்பு மற்றும் கடற்கரைப் பெருக்கம் (sea erosion and accretion) குறித்த ஆய்வுகளை அணுசக்தி நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்க்கப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆய்வு களை அணுமின் நிலைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. அமைவிடத்தின் கிழக்குக் கோடியில் நிறுவப்பட்டுள்ள கடல் நீர் உப்பகற்றி ஆலைகள் உள்ள கடலோரப்பகுதியானது கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகும் பகுதி என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன(10). அமைவிடத்தின் மேற்குப் பகுதியோ கடற்கரைப் பெருக்கப் பகுதியாக உள்ளது என்று அந்த ஆய்வுகள் கூறு கின்றன, என்றாலும்கூட, கடந்த சில ஆண்டுகளாகப் பெரு மணல் பகுதியில் சில தனியார் நிறுவனங்களால் கடற்கரை மணலானது சட்ட ரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படுவதால் கூடங்குளம் அமை விடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரைப் பெருக்க நிகழ்வு பாதிக்கும் மேலாகக் குறைந்து போயுள் ளது. அதுபோலவே அமை விடத்தின் கிழக்குப் பகுதியில் காணப்படும் கடல் அரிப்பு நிகழ்வானது இரட்டிப்பாகக் கூடிப்போயுள்ளது. கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை நிறுவியதோடு தன் பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அணுமின் நிலைய நிர் வாகத்திற்கு இது குறித் தெல்லாம் அக்கறை இல்லை. எனவேதான் பெருமணல் பகுதிகளில் தனியார் நிறு வனங் களால் மேற் கொள்ளப் பட்டு வரும் கண்மூடித்தனமான நட வடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை எவ்வித எதிர்ப் பையும் அது காண்பிக்க வில்லை.
16) 2008 ஆம் ஆண்டு நவம்பரில் தமிழகத்தைத் தாக்கீய நிஷா புயலின்போது சென் னைக்குக் குடிநீரை அளிப் பதற்காக நிறுவப் பபட்ட மீஞ்சூர் கடல்நீர் உப்பகற்றி ஆலையின் கடலடிக் குழாய்கள் கடுமையான சேதத் திற்கு உள்ளாயின. சேத மடைந்த அந்தக் குழாய் களை வெளியில் எடுக்கக்கூட இந்தி யாவில் ஆட்கள் இல்லை. எனவே நெதர்லாந்தில் இருந்து வான் ஊர்து நிறுவனத்தைச் சேர்ந்த பொறி யியலாளர்கள் வர வழைக்கப் பட்டார்கள். பணி நிறைவடைய ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது (11). இதைபோல ஒரு சூழ்நிலை கூடங்குளம் அமைவிடத்தில் உள்ள உப் பகற்றி ஆலைகளுக்கு நிகழாது என்று கூறமுடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் ஒருமாதத்திற்கும் மேலான நாட்களுக்கு இந்த உப்பகற்றி ஆலைகளின்றி அணு உலைகள் இயங்க வேண்டி வரும். இன்றைய தேதியில் அணு உலை வளா கத்தில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரின் கொள்ளளவு என்ற அடிப் படையில் பார்த் தால் உப்பகற்றி ஆலை களின்றி அணு உலை களால் வெறும் இரண்டரை நாளுக்கு மட்டுமே இயங்க முடியும். 1989 ஆம் ஆண்டி லிருந்து அணு சக்திக் கழகம் விபத்து காலங்களில் உபயோகப் படுத்தக் கூடிய இந்தத் தண்ணீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் இன்றுவரை கூடங்குளம் அமைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. 6 கோடி லிட்டர் தண்ணீருக்குப் பதிலாக அங்கு 1.2 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான ஏற் பாடுகளே செய்யப்பட்டிருக் கின்றன. (12)
17) முதலாவது அணு உலைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான குழியைத் தோண்டிக்கொள்வதற்கான அனுமதியை அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகம் கூடங் குளம் அணுமின் நிர்வாகத்திற்கு 2001 அக்டோபர் மாதம் கொடுத்தது. அணு உலைக்கான அமைவிடத்தில் 6 கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைப் பதற்கான கட்டு மானங் களைக் கட்டினால்தான் இந்த அனுமதி செல்லு படியாகும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் அணு மின் நிலையத் திலிருந்து வெறும் 900 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் திற்கு சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கத்தின் இயக்கத்தை நிறுத் துவதற்கான உடன டியான நடவடிக்கை களையும் மேற் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந் தது. அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகத்தின் இந்த இரண்டு நிபந்தனைகளையும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் இன்றுவரை நடை முறைப் படுத்தவில்லை என்பதுதான் உண்மை. என் றாலும்கூட, அணுமின் நிலைய நிர்வாகத்தை எதிர்த்து எவ்வகை நடவடிக் கையையும் எடுக்க முடியாத, திராணியற்ற நிலை யிலேயே அந்த நிறுவனம் உள்ளது. “விபத்து காலங்களில் தேவைப் படும் தண்ணீரின் அளவை தயவு செய்து இன்னும் அதிக அளவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்...” என்று அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகத்தின் இன்றைய தலைவ ரான டாக்டர் பஜாஜ் இன்றளவும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத் திடம் கெஞ்சிக் கொண்டிருக் கிறார்.(13)
18) மன்னார் வளை குடாவின் கடற்கரைப் பகுதியா னது உறுதியான நிலவியல் அமைப் பினைக் கொண்டிருக் கவில்லை என்பதையே தென் தனுஷ்கோடியானது 1948-49 ஆம் ஆண்டின் போது உடைந்து விழுந்து கடலில் மூழ்கி அழிந்து போன நிகழ்வு உணர்த்துகிறது (14). அதே மன்னர் வளைகுடாவின் கடற் கரையில் அமைந்துள்ள கூடங் குளம் அமைவிடத்தின் கடலோரப் பகுதியில் இப்படிப் பட்டதொரு நிகழ்வு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை இன்றளவும் அணு உலை நிர்வாகம் மேற்கொள்ள வில்லை . கடந்த நிலவியல் காலங் களிலும் செங்குத்தான இயக்கப் போக்கிற்கு இப் பகுதி யின்நிலமேலோடு உள்ளாக் கப்பட்டது என்பதை ஹெல்மட் ப்ரக்னர் தொடங்கி ஆர்ம்ஸ்ட்ராங் ஆல்ட்ரின் சாம் ஆகியோரின் ஆய்வுகள் வரை அனைத்து ஆய்வுகளும் உறுதி செய்கின்றன(15). இந்த ஆய்வு களுக்குப் பின்னரும் கூட இந்தக் கடற்கரைப் பகுதியானது உறுதி மிக்கது (stable shoreline) என்று மத்திய அரசின் வல்லுனர் குழு கூறியிருப்பதை அறிவியல் பயின்ற எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
19) மன்னார் வளை குடாவின் கடல் தரையில் எரி மலைகளின் சிகரங்கள் உள்ளன என்பதை 1975 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த பிரசித்திபெற்ற ரஷ்யக் கடலியல் அறிஞரான GBGgGgb G.B. உடிண்ட்செவ் தன் Geological and Geophysical Atlas of the Indian Ocean என்ற புத்தகத்தின் 151 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது போலவே ONGC நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரான V.V.சாஸ்திரி தலைமையிலான குழுவானது 1981 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் எரி மலை இருப்பதாகத் தன் ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் துரப் பணிகளுக்காகத் தோண் டப்பட்ட ஆழ்துளைக் கிணறு களில் எரிமலைக் கற்கள் வெகு சாதா ராணமாகக் காணப் படுவது குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. 1994 ஆம் ஆண்டில் நி.ஸி.ரி. மூர்த்தி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மன்னார் வளை குடாவிற்கான magnetic survey ஆய்வானது, மன்னார் வளைகுடாவின் கடல்தரையில் உள்ள அடித்தளக் கடினப் பாறையானது வெறும் 1-4 மீட்டர் தடிமனையே கொண் டுள்ளது என்றும், அந்தப் பாறைகளை எரிமலைப் பாறைகள் அடியில் இருந்து ஊடுரு வியிருப்பதால்தான் இது நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது. (அதாவது கூடங்குளம் அமைவிடத்தைப் போலவே அதனை அடுத்துள்ள மன்னார் வளைகுடாவின் நில மேலோடும் எரிமலைப் பாறை களின் ஊடுருவலால் மெலிந்து போயுள்ளது என்பதை மூர்த்தி குழுவினரின் ஆய்வுகள் நிறுவு கின்றன.) மேலும், மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் எரிமலை முகவாய் ஒன்று இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த எரிமலை முகவாயானது கூடங் குளம் அமைவிடத்தில் இருந்து வெறும் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது கூடுதல் தகவலாகும். (16)
20) உறுதி குறைந்த நில மேலோட்டினைக் கொண்ட இந்தப்பகுதியில் நிகழ வாய்ப் புள்ள நிலவியல், கடலியல் மற்றும் காலவியல் (meteorological)) பேரிடர்களின்போது கூடங் குளம் அணுமின் நிலையத்தின் கடல்நீர்க் குழாய் களாலோ அல்லது உப்பகற்றி ஆலையின் குழாய் களாலோ பிரச்சினை களின்றி இயங்கிட முடியும் என்பதை சந்தேகங்களுக்கு இடமின்றி நிறுவும் அறிவியல் ஆய்வுகள் இல்லை.
21) ஆக, கூடங்குளம் அமை விடத்தின் நில மே லோட்டிலும், அதனை சுற்றி அமைந்துள்ள நில மற்றும் கடல் பகுதியில் உள்ள நில மேலோடுகளிலும் பிதுங்கு எரிமலைப் பாறைகள் மிக அதிக அளவில் ஊடு ருவியுள் ளன. இதன் காரணம் இந்த மேலோடுகளின் தடிமன் மிக அதிக அளவில் குறைந்து போயுள்ளது. குறைந்த தடிமன் கொண்ட நில மேலோட்டின் ஊடாக செல்லும் அச்சன் கோவில், தென்மலை - கடனா மற்றும் சென்னை-கன்னியாகுமரி நிலப்பிளவுகளில்தான் குறைந்த அளவு எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் பிரச்சினை இதோடு முடியவில்லை.
22) 2011 நவம்பர் 26 ஆம் தேதியன்று கூடங்குளம் அமைவிடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள (ராதாபுரத்திற்குத் தெற்கே அமைந்துள்ள) பண்ணையார் குளத்தில் பெய்த மழையின்போது 10 அடி சுற்றளவில் 15 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஒன்று உருவானது. சுற்றுப்பகுதியில் தேங்கியிருந்த நீரெல்லாம் இந்தப்பள்ளத்திற்குள் சென்று மாயமாகி மறைந்து போனது. அருகில் தேங்கியிருந்த தண் ணீரை பள்ளத்திற்குள் வெட்டி விட்டார்கள். அதுவும் சட் டென்று உள்ளில் சென்று மறைந்து போனது. இதுபோன்ற நிகழ்வு 2008 ஆம் ஆண்டில் ராதாபுரம் அருகே நிகழ்ந்தது. அப்போது கிண்று ஒன்றில் இருந்த தண்ணீர் மாயமாக மறைந்து போனது. கார்ஸ்ட் நிலப்பகுதிக்கான (karst region) அறிகுறிகளே இவை. (17) கூடங்குளம் அமைவிடமும் ஒரு கார்ஸ்ட் (பாதாள சுண்ணாம் புப் பாறை குகைகள்) பிராந் தியத்தில் அமைந்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனை எதுவும் அணுமின் நிலைய நிர் வாகத்திற்கு இல்லை. எனவே, இந்தப் பகுதி கார்ஸ்ட் நிலப் பகுதியா இல்லையா என்பதை அறிந்து கொள்ளத் தேவைப் படும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
23) 2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இந்தக் கடல்பகுதியில் கடலானது பலமுறை உள் வாங்கியுள்ளது. (18) கடலானது இப்படி உள்வாங்குவதற்கான காரணத்தை இன்னமும் அறிவியல் உலகம் முழுமையாக விளங்கிக் கொள்ள முயற்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் எதிர்காலங்களில், கூடங் குளம் அமைவிடத்தை ஒட்டிய கடல்பகுதியில் கடல் உள்வாங்கக்கூடிய சாத்தியம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் அணுமின் நிலைய நிர் வாகத்திடம் இல்லை. கடல் உள்வாங்கும் நிகழ்வு நடக்கும் தருணங்களில் கடல்நீரை அணு உலையின் தேவைக்காக உள் ளெடுக்கும் கடலடிக் குழாய் களால் கடல்நீரை உள் ளெடுக்க முடியாது. வெறும் காற்றை மட்டுமே உறிஞ்ச வேண்டியிருக்கும். கடல்நீர் உப்பகற்றி ஆலைகளும் இதே பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும். அணு உலை களின் பாதுகாப்பை சுனாமி வராத காலங்களிலேயே சீர் குலைக்கும் தன்மை கொண்ட இதுபோன்ற தருணங்களை எவ்வாறு கையாளுவது என்ப தற்கான திட்டங்கள் அணு மின்நிலைய நிர்வாகத் திடம் இன்றளவும் இல்லை என்பது தான் உண்மை. (19)
24) இந்தியாவின் கடலோ ரப் பகுதிகளை அரு காமையில் உள்ள பகுதிகளில் இருந்து ஏற்படும் சுனாமிகள் தாக்க வாய்ப்பில்லை என்பது தான் அணுசக்திக் கட்டுப் பாட்டுக் கழகத்தின் நம்பிக் கையாகும். அந்த நம்பிக்கை உண்மையானதுதான் என்பதை நிறுவும் அறிவியல் ஆதாரங்கள் அதனிடம் இல்லை. அருகாமையில் உள்ள இடங்களில் சுனாமியை உருவாக்க சாத்தியம் கொண்ட நிலவியல் அமைப்புகள் இங்கும் இருக்கத்தான் செய்கின்றன. அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் கண்களுக்கு அவை இன்றளவும் தென்படவில்லை என்பதுதான் உண்மை. பேரிடர் நிகழ்வுகள் நடந்த பின்னர்தான் கற்றுக் கொள் வார்கள் போலிருக் கிறது. அடுத்துள்ள பகுதியில் சுனாமி களை உருவாக்க வாய்ப்புள்ள காரணி களாக மூன்று காரணிகள் சுனாமி வல்லு னர்களால் முன்வைக்கப் படுகின்றன. அவை: 1) சக்தி வாய்ந்த பூகம்பங்களை ஏற் படுத்தக் கூடிய நிலப்பிளவுகள், 2) கடல் எரிமலைகள் மற்றும் 3) கடல் தரையில் ஏற்படும் நிலச் சரிவுகள். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு 104 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில், கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதற்கு சர்வதேச எரிமலைத் திட்டமானது 0305-1 என்ற எண்ணைக் கொடுத்துள்ளதாகவும், 1757 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அது வெடித்ததாகவும் 2011 மே மாதம் சர்வதேச அணுசக்திக் கழகத் தால் வெளியிடப்பட்ட “எரி மலைப் பேரிடர் ஆய்வு” குறித்த ஆவணம் கூறுகிறது.(20) கடலடி எரிமலைகளின் வெடிப் பாலோ அல்லது அதன் மே லோடு உடைந்து குழிந்து பள்ளமாகிப் போகும் நிகழ் வாலோ 100 மீட்டர் உயரம் கொண்ட அலைகளைக் கொண்ட மெகா சுனாமிகள் கூட உருவாக முடியும் என்பதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த் தியுள்ளன. என்றாலும் கூட, இதுகுறித்து சிந்தனை செய்ய மறுக்கும் போக்கையே இந்திய அணுசக்திக் கழகம் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அருகில் உள்ள பகுதியில் இருந்து சுனாமி ஒன்று உருவா கலாம் என்பதற் கான சாத்தியம் கல்பாக்கம் அணுமின் நிலையத் திற்கு உள்ளதைப் போலவே கூடங் குளம் அணு மின் நிலை யத்திற் கும் அண்மைப் பிர தேசங்க ளில் இருந்து சுனாமிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து கூடங் குளம் அணுமின் நிலைய நிர் வாகிகள் அறிந் திருக்கவில்லை என் பதையே அவர்களின் மௌ னமும், மேதை அப்துல் கலாம் மற்றும் மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிக்கைகளும் உணர்த்துகின்றன.
25) 1982 ஆம் ஆண்டில் மன்னார் வளைகுடாவில் வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரீ ஆகிய ஆய் வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல முக்கியமான தக வல்கள் தெரியவந்தது. மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் இரண்டு மிகப்பெரிய சரிந்து சாயும் வண்டல் குவியல்கள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. 100 மற்றும் 35 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்களுக்குக் கிழக்குக் குமரி வண்டல் குவியல் மற்றும் கொழும்பு வண்டல் குவியல் என்று அவர்கள் பெயர் சூட்டினர். 50 கிலோ மீட்டருக்கும் மேலான அகலத் தைக் கொண்டிருக்கும் இந்த வண்டல் குவியல்கள் கொழும் புவிற்கு அடுத்தும், குமரிக்கு அடுத்தும் உள்ள கண்ட மேலோடுகள் உடைந்து போன தாலே உருவாகியுள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறியது. இந்த வண்டல் குவியல்களில் உடைந்து போன பல பகுதி களும், க்ஷி போன்ற குழிகளும், செங்குத்தாகக் கீழி றங்கும் உடைப்புகளும் இருப் பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர். மேலும் இந்த வண்டல் குவியல்களில் கடந்த காலத்தில் நிலச்சரிவுகள் ஏற பட்டி ருப்பதற்கான ஆதாரத் தையும் அவர்கள் முன் வைத்தார்கள். (21)
- ரா.ரமேஷ், வி.டி.பத்மநாபன், வீ.புகழேந்தி
அடுத்த இதழில் முடியும்