10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக மாணவ,- மாணவிகள் சென்னையை நோக்கி வருவது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைக்கவே சிரமாக இருக்கும் சூழலில் எப்படி இவர்கள் சென்னையில் தங்கி படிக்கபோகப்போகிறார்கள் என்பது மற்றொரு பிரச்சனையாக உள்ளது.

ஏன் எனில் சென்னையில் அரசு விடுதிகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் போடக்கூடிய மாணவர்களில் 50 சதமானோருக்கு மட்டுமே விடுதிகள் கிடைக்கின்றன. மற்றவர்கள் விடுதிகளில் கெஸ்டுகளாகவும், சென்னை மாநகரில் அதிக கட்டணத்தில் வீடுகளில் வாடகைக்கும் தான் இருக்கிறார்கள். தனியார் விடுதிகளை அனுகினால் அங்கே கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

சென்னையில் மொத்தம் 24 அரசு விடுதிகள் உள்ளன. பிற்ப்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த கல்லூரி மாணவர்களுக்காக வடபழனி திருநகர், மைலாப்பூர், துரைப்பாக்கம் ஆகிய 3 இடங்களிலும், கல்லூரி மாணவிகளுக்கு அஜிஸ் நகர், கோடம்பாக்கத்திலும், பள்ளி மாணவிகளுக்கு திருவான்மியூரில் ஒரு விடுதியும் இருக்கின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு பெரியார் பாதை (வடபழனி திருநகர்), ஓட்டேரி ஆகிய 2 இடங்களிலும் விடுதிகள் உள்ளன.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பை சார்ந்த இளங்கலை மாணவர்களுக்கு எம்.சி.ராஜா (சைதாப்பேட்டை), எம்.சி.ராஜா இணைப்பு (சைதை), நந்தனம், கோடம்பாக்கம், பெரம்பூர் இணைப்பு வில்லிவாக்கம், வில்லிவாக்கம் ஆகிய 6 விடுதிகளும் உள்ளன. கல்லூரி மாணவிகளுக்காக இராயபுரத்தில் ஒரு விடுதியும் உள்ளது. முதுகலை ஞழு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சூர்ய நாராயணன் செட்டி தெரு இராயபுரத்தில் ஒரு விடுதியும், மாணவிகளுக்கு , சிமென்டரி ரோடு, இராயபுரத்தில்ஒரு விடுதிகளும் உள்ளன.

அதைப் போல ITI படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வில்லிவாக்கத்தில் ஒரே முகவரியில் 2 விடுதிகள் உள்ளன. ITI மாணவிகளுக்கு இராயபுரத்தில் ஒரு விடுதியும் உள்ளது.

பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இராயபுரத்தில் 2 விடுதிகள் உள்ளது. பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இராயபுரம், வில்லிவாக்கம் உட்பட மொத்தம் 3 விடுதிகள் உள்ளன. இதில் முக்கியமானதென்ன வென்றால் அரசு நிர்ணயித்த இடங்களை காட்டிலும் கூடுதலாகத்தான் இந்த விடுதிகளில் மாணவர்களை அரசு நிர்ணயிக்கிறது. மேலும் கெஸ்ட்டுக்களும் தங்கி வருகின்றனர்.

எனவே, மாணவ, -மாணவிகள் பள்ளிகள், கல்லூரியில் சேர்ந்த உடனே விரைவாக நேதாஜி சாலையில் உள்ள, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் (சிங்கார வேலர் மாளிகை) கடற்கரை இரயில் நிலையம் எதிரில் சென்று விடுதிகளுக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும். இவ்விண்ணப்பத்தை பெற தாங்கள் பள்ளி, கல்லூரியில் சேர்ந்த ரசீது சீட்டையும், தங்களுக்கான சாதி சான்றிதழ் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக மாணவர்கள் நேரடியாக சென்று தான் விண்ணப்பங்களை வாங்க முடியும்.

மேலும் தங்கள் பொருளாதார வசதிகேற்ப மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிக்கு அருகாமையிலேயே பல தனியார் மற்றும் அரசு உதவிபெரும் விடுதிகள் இருக்கின்றன. தங்களுக்கு எந்த இடத்தில் விடுதி வேண்டுமோ அந்த இடத்தை அறிய Just Dial 044-2644 4444 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் அல்லது தமிழ்நாடு அரசு இணையதளத்தில் சென்று அனைத்து அரசு, தனியார் விடுதிகள் மற்றும் கல்லூரிகளின் முகவரி ஆகியவற்றின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)

Pin It