இதை செய்யும் முன்பு உங்கள் வாகனத்தின் பேட்டரியில் ஏதேனும் உடைந்துள்ளதா அல்லது Acid Leakage உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

car batteryசெய்யும் போது கையுறை அணிந்து கொல்வது அவசியம்.

பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ள வயர் துரு பிடித்திருந்தால் அதை சுத்தம் செய்யவும்.

இப்போது பேட்டரி நல்ல நிலையில் உள்ள மற்றொரு காரை (Functional car) அருகே வந்து நிறுத்தவும் ( அதாவது இரு வாகனங்களின் பேட்டரிகளையும் ஒரு Jumper cable மூலம் இணைக்கும் அளவிற்கான தூரம்)

இப்போது Functional car ஐ ஆஃப் செய்யவும்.

இப்போது இரு வாகனத்தின் Front compartment ஐ திறக்கவும்.

இப்போது Jumper cable (Red color) மூலம் இறந்த பேட்டரியின் Positive முனையை Functional car பேட்டரியின் Positive முனையுடன் இணைக்கவும்.

பிறகு jumper cable (Black color)ன் ஒரு முனையை Functional carன் Negative முனையுடன் இணைத்து மற்றொரு முனையை இறந்ந பேட்டரி உள்ள Carல் Ground செய்யவும் அதாவது மற்றொரு முனையை இறந்த பேட்டரி உள்ள Carன் Frame அல்லது Chassis உடன் இணைக்கவும். இணைக்கும் இடம் Paint, துரு ஆகியவை இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

பிறகு Functional carஐ Start செய்து சுமார் 5 நிமிடம் Engineஐ ஓட விடவும். அப்போது Jumper cable மூலம் Dead battery ஆனது Charge ஆகும்.

5 நிமிடம் கழித்து Dead battery உள்ள Carஐ ஸ்ட்டார்ட் செய்யவும். Start ஆகா விட்டால் Functional carன் Engine ஐ மீண்டும் ஒரு 5 நிமிடம் ஓட விடவும்.

பிறகு Dead battery, charge ஆனதும் அந்த வாகனம் Start ஆகும்.

பிறகு Jumper cable ஐ பின் வரும் முறையில் Remove செய்யவேண்டும்.

1) Ground செய்யப்பட்ட முனை

2) Functional car ன் Negative முனை

3) Functional car ன் Positive முனை

4) Dead battery ன் Positive முனை

Remove செய்த பின் இரு வாகனங்களின் Engineஐயும் சுமார் 10-20 நிமிடம் வரை ஓட விடவும்.

- ஷேக் அப்துல் காதர்

Pin It