“எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஓர் பொருளை குறித்தே உருவாகிறது.

            manavai mustafa bookஒவ்வொரு மொழியில் உள்ள கருத்துக்களை பிற மொழியில் பெயர்த்து எழுதுதல் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும். ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லுக்கு ஏற்ற சொற்செறிவும், கருத்தாழமும் மிக்க எளிமையான சொல்லை கலைச் சொல் என்கிறோம்.

            “ஒரு மொழியில் இல்லாத சொல்லுக்கு வேற்று மொழியினின்று நேரிடையாகச் சொற்களைப் பெற்றோ, ஒலிப் பெயர்த்தோ அல்லது மொழி பெயர்த்தோ புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதைக் கலைச் சொல்லாக்கம் என்பர். குறுகிய பொருளில் பயன்படும் சொற்களே கலைச்சொற்கள். புதிய கருத்துக்களை விளக்க, கலைச்சொற்கள் குறுகியவையாகவும் இலக்கண விதிகளுக்கு ஈடுகொடிப்பனவாகவும் இருக்க வேண்டும் (பக். 345, வெ.கலைச்செல்வி, கல்வியியல்)

            யூஜின் ஊஸ்டர் என்னும் ஆஸ்திரியப் பொறியாளர் கலைச் சொல்லாக்கம்/கலைச்சொல் தரப்படுத்துதல் குறித்து 1931 ஆம் ஆண்டு Intenational Standardization of Techinical Terminology என்னும் நூலை எழுதினார். அதன்பின் ‘கலைச்சொல்லியல்’ வளரத் தொடங்கிற்று. இன்று பல்வேறு நாடுகளில் (வளர்ந்த, வளர்முக நாடுகள்) கலைச்சொல்லாக்கத்தை உருவாக்க பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு புதிய பொருளோ அல்லது கண்டுபிடிப்பின் விளைவாகத்தான் சொற்களின் இன்றியமையாமையும் (Importance) தேவையும் (need) உருவாகுகிறது. “தொழில் வளம்? பொருள் வளம்? அறிவு வளம் நிறைந்த ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உலகில் எந்நாட்டிலும், எம்மொழியிலும் நூல்கள் வெளிவந்தாலும் உடனே தத்தம் தாய்மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் பிற நாட்டு மக்களின் கண்ணோட்டமும் கருத்துகளும் உடனக்குடன் உலகெங்கும் பரவுகின்றன. இதன் மூலம் அந்நாடுகளில் அவரவர் தாய்மொழிகளில் மொழிபெயர்க்க ஏதுவாக கலைச்சொற்கள் செழித்துள்ளமை புலனாகிறது” (ப. 15, இராம. சுந்தரம் வளர்தமிழில் அறிவியல்).

            புதிய புதிய கண்டுபிடிப்புகளும், நிலவியல் ரீதியான உறவுகளும் பல்கி பெருகியதும், சர்வதேசிய உறவு ஏற்பட தொடங்கியது. உலகில் 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தொழிற்புரட்சிக்குப் பின்னரும் உலகளவில் பெருமாற்றம் நிகழத் தொடங்கியது. ஆராய்ச்சித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. இவற்றிற்கான அடிப்படைக் காரணம் நிலபிரத்துவ சமூகம் சூழல் முதலாளித்துவ சமகமாய் மாற்றம் பெறுவதற்குரிய சூழலைத் தோற்றுவித்தது.

            பழைய கருவிகள் நவீன கருவிகளாய் புதிய புதிய வடிவம் பெற்றது. முதலாளித்துவ நாடுகளுள் உற்பத்திப் பெருக பெருக சந்தைக்குள் பொருள் விற்பனைக்கு பல போட்டிகள் நிகழத் தொடங்கின, உற்பத்தி பொருட்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும், ஒவ்வொரு நாட்டிலும் தம் நாட்டின் வணிக நிறுவனங்களையும் தொடங்கலாயினர். இந்தியா போன்ற பெருமக்கள் வாழும் பிரதேசங்களில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவினர்.

            அவர்கள் கண்டுபிடித்தப் பொருட்களை அவர்கள் மொழியில் பெயர்களை உருவாக்கியிருந்தனர். அவர்கள் பொருளை விற்பதற்கு பல்வேறு விளம்பர சொற்கள் தோற்றம் பெற வழிகோலியது.

            தேவை என்பது பொதுவாகிற பொழுது ஒவ்வொரு தனி மனித தேவையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளாலும் வேலை பளு குறைவதாலும் புதிய பொருட்களை வாங்கும் தேவை ஏற்படுகிறது. கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டத்திலேயே நிகழ்ந்துள்ளதும் கண்டுபிடித்தவர்களே பொருட்களுக்குப் பயர் வைத்ததும் கலைச் சோற்கள் தோன்றுவதற்குரிய மூலக் காரணமாய் அமைந்தது. அது மட்டுமல்லாது அதிகாரம் படைத்த நாடுகள் தாம் அடிமைப்படுத்திய நாடுகளுக்குள் மொழி, கலாச்சார பரிமாற்றத்தையும் ஏற்படுத்தத் தொடங்கின.

            இன்றைய ஏகாதிபத்திய நாடுகளின் சர்வ அதிகாரத்னிலும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியாலும் எந்த மூளையிலும் ஒரு சிறிய புதிய பொருட்களோ, பிற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலோ உடனடியாக நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த அளவிற்கு கணிப்பொறியின் பயன் அமைந்திருக்கிறது.

            இந்நிலையில் புதிய சொற்கள் தினந்தோறும் உருவாகி வருகிறது. சில பொருட்கள், கண்டுபிடிப்புகளுக்கு புதிய சொற்கள் உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது, இன்றும் தேவை எற்படுகின்றது. இதனடிப்படையிலேயே ஒவ்வொரு மொழியின் உள்ள ‘மொழியியல்’ திறனாய்வாளர்கள் புதிய புதிய சொற்களை தேடி அலைய வேண்டியுள்ளது. குறிப்பாக ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய உரிய தனித்த மொழி அடையாளத்துடன், மொழி வெரையறையுடனும் வாழ்ந்து வருகின்றோம். எனினும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மொழி மீறலும் தவிர்க்க இயலாததாகிறது. இதனை, கருத்திற் கொண்டும், கலைச் சொற்களை படைத்து மொழியை பாதுகாக்க வேண்டிய சூழலும் நிலவி வருவதும் அடிப்படை தேவை, மற்றும் உரிமையாகிறது.

எவை கலைச்சொற்கள்

            நம் நாட்டில் கண்ட, கண்டுபிடித்த சொற்களை நம் மொழி வரையறைக்கு ஏற்ப உருவாக்குகின்றோம். ஆனால் வேற்று நாட்டினரின் சொல் வடிவம், ஒலி வடிவம் மாறுபட ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையும் உருவாகுகிறது.

கலைச்சொல் அறிஞர்கள் கருத்து

            நுட்பச் சொல் என்றும், சிறப்பு சொல் என்றும், துறைச்சொல் என்றும், சாதாரண சொல்லே என்றும், புதிய கண்டுபிடிப்பு, கருத்துக்களையும் கொண்ட சொற்கள் என்றும், தெளிவாக கலைச் சொல்லை பற்றிய முழு விளக்கம் இல்லை என்றும் பல்வேறு நிலையில் அறிஞர்கள், திறனாய்வாளர்கள் தமது கருத்துக்களை வழங்கியுள்ளார்.

கண்டுபிடிப்புகளும், கலைச் சொற்களும்

            கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த நாட்டவரே அப்பொருளுக்கு பெயர் வைக்கின்றனர். தனி மனிதன் ஒரு பொருளை கண்டுபிடித்தாலும் அப்பொருள் உலக மனிதர்கள் அனைவருக்குமான பொது தேவையாகிறது. பொருளின் தேவை ஏற்பட, கண்டுபிடிப்பை அறியவும், கண்டபிடித்தவற்றை நுகர்வதற்கும், நுகர்வாளராய் நாம் முன் நிற்கின்றோம். இக்கண்டுபிடிப்பை அறியவும், அப்பொருளின் பெயரினையும் அறிகிறோம். அப்பொருளுக்கு முதற்கண் என்ன பெயர் வைக்கப்படுகிறதோ அப்பெயரையே நாமும் குறிப்பிடுகின்றோம். இல்லையெனில், புதிய மொழிக்கேற்ப புதிய பெயரை நாம் உருவாக்கி அழைக்கிறோம். இதுபே ஒரு மொழி சும் மனித சமூகத்துக்குள் ஒரு புதிய சொல் தோற்றம் பெறுகிறது. இச்சொற்களே புதிய ஆக்கச் சொற்களாகின்றது. இவ்வடிப்படையிலேயே புதிய புதிய சொற்கள் தோன்றுகின்றன. இச்சொற்களே கலைச் சொற்களாகின்றன.

            18 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அறிவியலில் மிகப் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அவற்றுள் மொழியிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கின. அத்தகைய மாற்றத்தின் விளைவே கலைச்சொல் அல்லது புத்தாககச் சொல் உருவாகக் காரணமாயிற்று.

எவை கலைச்சொற்கள்

            1.வேற்று நாட்டினில் கண்டுபிடித்த பொருட்களுக்குரிய சொற்களும், (அச்சொற்களை நம் மொழியில் பயன்படுத்தும் போது)

            2.வேற்று நாட்டினில் கண்டுபிடித்த பொருட்களுக்குரிய சொற்களை மாற்றி நம் மொழியில் புதிய பெயர் வைத்திடினும் அதுவும் கலைச்சொல்லே.

            குறிப்பாக, வேற்று நாட்டில் (பொருட்களின் பெயர்களுக்கு) பயன்படுத்துகின்ற பொருட்களின் சொல்லானது மொழி வரையறைக்கு உட்பட்டோ (or) மொழி வரையறை மீறியே அமைந்த சொற்களும் கலைச் சொற்களே ஆகும் எனலாம்.

            --- தமிழ் மொழியில் வழங்கப்பட்ட சொல்லாயினும் புதிய வேற்று பொருளுக்கு அச்சொல்லை நாம் பயன்படுத்துவோமானால் அவையும் கலைச்சொல்லாகவே அமைய முடியும்.

            --- மனிதன் தாம் கண்டுபிடித்தப் பொருட்களுக்கும், கண்ட பிற இயற்கை, இயற்கை சார் புறப் பொருட்களுக்கும் பெயர் வைத்து அழைக்கிறான். ஒவ்வொரு கண்டுபிடிப்பும், அவர்கள் பயன்படுத்திய மொழியினில் சொற்களை உருவாக்குவது இயல்பு, அப்படி தான் நாம் கண்ட, கண்டுபிடித்த, உருவாக்கிய அனைத்திற்கும் பெயர்கள் வைத்திருக்கிறோம்.

எவை கலை சொல் அல்ல

            அவ்வகையில் நம் நாட்டில் வழங்கப்பட்ட வழங்கப்படுகின்ற சொற்களும், நம் நாட்டினனில் நம் மொழி தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருட்களுக்கு, நாம் வைக்கும் பெயர்கள் கலைச்சொல் ஆகாது. அது நம் மொழியின் புதுச்சொல் ஆகும். இச்சொற்கள் பிற நாட்டினரின், பிற மொழியினர் பயன்படுத்தும் போது, அது பிற தேசத்து மக்களுக்கான கலைச் சொல்லாக தோன்றியிருக்கும் (or) உருவாகியிருக்கும்.

கலைச் சொற்கள் உருவாக்கம்

            கலைச் சொற்கள் 5 வகையான நிலைகளில் தோன்றுகின்றன.

 1. ஒலி பெயர்ப்பு
 2. எழுத்துப் பெயர்ப்பு
 3. தமிழாக்கம்
 4. கலப்பு சொல்
 5. கடன் மொழிபெயர்ப்பு
 6. புதுச் சொல் படைத்தல்

ஒலி பெயர்ப்பு

 1. Pasparas - பாஸ்பரஸ்; America – அமெரிக்கா,

Aircel - ஏர்செல்; Sun TV – சன், டி.வி.

 1. தமிழக்கம்

Acid – அமிலம், Shirt – சட்டை.

 1. கலப்புச் சொல்

Ioinization – அயனி ஆக்கம்; எந்திர கலவை.

 1. கடன் மொழி பெயர்ப்பு

Television – தொலைக்காட்சி

 1. புதுச்சொல் படைத்தல்

Bicycle – மிதிவண்டி, ஈருருளி.

Television – சின்னத்திரை.

            உதாரணமாக, அவை – என்பது நுண்ணிய பொருள் என்று பண்டைய தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த சொல்லாகும். இன்று Neclus என்ற உட்கருவை அணு என்று அழைக்கிறோம். அன்றைய சொல்லாயினும் அன்றைய கருத்துக்கு மாறுபட்டு , தற்போது புதிய புதிய கண்டுபிடிப்பான Necluer-க்கு அப்பெயரை அழைப்பதால் அச்சொல் ‘கலைச்சொல்’ என்று அழைக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

            கடன் மொழிபெயர்ப்பில் சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தலும் உண்டு.

Full wave rectifier – முழு அலை திருத்தி.

Magnetic power – காந்த சக்தி.

கடன் கலப்பு (loan bled) தமிழ் + ஆங்கிலம் (or) ஆங்கிலம் + தமிழ் = கலப்பு சொல்.

மைக்ரோ போன் + தகடு = மைக்ரோபோன் தகடு.

டேப் +கள் = டேப்கள்.

மின் + கப்ளை = மின்சப்ளை.

எக்ஸ் + கதிர் = எக்ஸ்கதிர் (புற ஊதாக் கதிர்கள்)

குளோனிங் + முறை = குளோனிங் முறை. (செயற்கை கருத்தரிப்பு முறை)

Microscope – நுண் + நோக்கி = நுண்ணோக்கி, இது கலப்பால் உருவாக்கப்பட்ட புது சொல் இவை கலைச்சொல்லே.

Ampere – ஆம்பியல், Joule – ஜுல் (சூல்) Calcium –கால்சியம், Cadmium – காட்மியம், Carbon – கார்பன், Photon –ஃபோட்டான், Meter – மீட்டர், Sulphite – சல்ஃபைட்டு, Diesel – டீசல், Petrol – பெட்ரோல்.

கார்ல்மார்க்ஸ், அமெரிக்கன் வெஸ்புகி, ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின் புதுப் பெயர்ச்சொற்கள்

இஞ்சி – (Zingiber Officinale) மிளகு – (Piper nigrum) இச்சொற்களுள் தமிழுள் பண்டைய காலத்தே உருவாகிய நம் மொழிச் சொற்கள் ஆகும். ஆகவே, இவை கலைச்சொற்கள் என்று கூற முடியாது. துறை ரீதியில் நம் மொழியாலர்கள் Zingiber, Piper என்று பயன்படுத்தினால் அவற்றினை கலைச் சொற்கள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

 • உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் X – Ray – எக்ஸ் ரே, எக்ஸ் கதிர்கள். Sin – சைன்.
 • உலக அளவில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், சூத்திரங்களை மாற்றமில்லாது பயன்படுத்துதல்.

குறியீடு -  ,  ,  .

சூத்திரம் – E = mc2, Co2, H2o

கலைச்சொற்களை உருவாக்கும் முறை

 1. ஒரு மொழி பெயர்ப்பாளருக்குரிய அனைத்து தகுதிகளும் கலைச் சொல்லாக்குபவருக்கும் இருக்க வேண்டும். எனவே கலைச்சொற்களை உருவாக்க மூல மொழியிலும் (Source Language) பெறு மொழியிலும் (Target Language) நன்கு தேர்ச்சி பெற்று தமிழறிவு, துறை, அறிவு ஆகியவற்றை கொண்டு பொருட் செறிவும் கருத்தாழமும் மிக்க எளிய சொல்லைத் தர தகுதியுடையவர் மட்டுமே கலைச்சொற்களை செம்மையாக உருவாக்க ஏற்றவராவார்.
 2. கலைச்சொல்லை ஒலிப்பெயர்ப்பு (Translileration) மொழி பெயர்ப்பு (Translation) புதுச் சொல்லாக்கம் ( Coining new words) ஆகிய ஏதேனும் ஒரு முறையில் உண்டாக்கலாம்.
 3. வழக்குச் சொற்களையும் வட்டார மொழிகளையும் பொது மக்களிடமிருந்து ஏதேனும் ஒரு மக்கள் தொடர்பு அமைப்பின் மூலம் பெறலாம்.
 4. அயல் நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும் இலங்கை போன்ற அண்மை நாடுகளிலிருந்தும் இதுகாறும் தொகுக்கப்பட்டுள்ள கலைச் சொற்களைத் தொகுக்கலாம்.
 5. கலைக்கதில், களஞ்சியம் போன்றவற்றில் வெளியாகும் கலைச் சொற்களை தொகுக்கலாம்.
 6. தொழில் தொடர்பான சொற்களுக்கு ஏற்ற கலைச் சொற்களை உருவாக்கும் போது அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து தொகுத்தல் சிறப்பு, எ-டு: Hammer என்னும் சொல்லிற்குத் தச்சரிடமிருந்து சுத்தியல் என்னும் சொல்லைப் பெறலாம்.
 7. பொருத்தமான கலைச்சொற்கள் தமிழில் கிடைக்காதபோத நடைமுறைப் பயன் கருதி ஒலிப்பெயர்க்கலாம் அல்லது பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். இவ்விரண்டு நிலையிலும் அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.
 8. ஒவ்வொரு மொழியிலும் நன்கு தேர்ச்சியடைந்த பேரறிஞர்கள் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் கொண்ட ஆயக்குழு நியமிக்கப்பட்டும், அவர்கள் கணிப்பொறி துறையிலும் மிகச் சிறந்ததோராய், உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு, பல்வேறு கலைச் சொற்களை சேகரிப்பது மட்டுமின்றி, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வேற்று நாட்டார் உருவாக்கும் பெயர்ச்சொல்லிற்கு நம் மொழி சார்ந்த பெயர்ச்சொல்லை உடனடியாக மக்களிடத்து வழங்குவதற்குரிய, சூழலை கையாளுதலும், கணிப்பொறிக்குள் மிகச் சரியாக புதிய கலைச்சொல்லை கையாள்வதும் மிகுந்த, முக்கியமான அவசியமாகும்.

துணை நூல்கள்

 1. வெ.கலைச்செல்வி, கல்வியியல் தமிழ் சஞ்சீவி வெளியீடு, காமதேனு பவர், வாசவி கல்லூரி, ஈரோடு-16)

2. வளர்தமிழில் அறிவியல், இராம. சுந்தரம் (ப.ஆ) அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர். மு.ப. 1993

முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்

Pin It