அழிந்து வரும் அழிவு தினத்தின் நினைவுச் சின்னம்

 நினைவுச்சின்னம் என்றால் அழிந்து போன ஒன்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். தனுஷ்கோடியில் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகின்றது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஏற்பட்ட புயல் மற்றும் கொந்தளிப்பால் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி நகரமே அழிந்து போனது.

 அவ்விடத்தில் பாத்திமா பீவி கவர்னராக இருந்தபோது நினைவுச்சின்னம் ஒன்று வைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் அந்த நினைவுச் சின்னமே அழிந்து வருகிறது.

இளவயது காந்திஜியின் சிலை

 உலகம் எங்கும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சிலைகளும் வயதான தோற்றத்திலேயே உள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பர்க்கில் காந்தி இளவயதில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது இருந்த தோற்றத்தின் சிலை நிறுவியுள்ளார்கள். இந்த சிலையை தென்னாப்பிரிக்கா அரசே நிறுவியுள்ளது.

எலிக்கோயில்

 நாகப்பாம்புகளை தெய்வமாக வழிபடும் நாகர் கோயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதனால் நாகர்கோவில் என்ற ஊரே உருவானது. இந்தியாவில் எலிக்கும் கோயில் உண்டு. ராஜஸ்தானில் உள்ள பீஜானீர் பகுதியில் இருந்து 35 கி.மீ.தூரத்தில் எலிக்கென்று கோயில் உள்ளது. ராஜஸ்தானில் இதற்கு காபால் கோயில் என்று பெயர்.

ஹோமியோபதி பிறக்க அடிப்படையாக இருந்த நூல்

 நோயாளிகளுக்கு அதிகமான மருந்து வகைகளைக் கொடுக்க கூடாது என்று டாக்டர் ஹானிமென் 1792 இல் இருந்து 1800 வரை ஒரு கொள்கையாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்பாக பல படைப்புகளை எழுதினார். இப்படைப்புகளை த ஆர்கனான் ஆப் ஜெனரல் ஹிலீங் என்ற தலைப்பில் தொகுத்தார். இதிலிருந்துதான் ஹோமியோ முறை பிறந்தது.

- வைகை அனிஷ்

Pin It