• நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
  • 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
  • நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.
  • நாம் படுத்திருக்கும்போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக் காற்றும் தேவைப்படுகிறது.
  • உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.
  • நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.
  • ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.
  • நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.
  • மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய்க் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
  • இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 விநாடிகள் ஆகும்.
  • ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 ஆண்டுகள் தூங்குகிறான்.
  • இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருடத்திற்கு 4 கோடி தடவை, உங்கள் வயதை 4 கோடியால் பெருக்கிப் பாருங்கள்.
  • மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி வரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்.
Pin It