மைக்கேல் என்ற தேவதூதர்

மைக்கேல் என்ற தேவதூதர்

வலைத்தளத்தில் வழக்கமான தேடலின்போது Quis ut Deus? என்ற சொற்றொடரும், அதற்கான Archangel Michael ன் சாத்தானின் வடிவிலுள்ள Dragon ஐ வதம் செய்யும் சிலையின் தோற்றமும் என்னைக் கவர்ந்தது. இதன் விளைவே Archangel மைக்கேல் பற்றிய இக்கட்டுரை.

Quis ut Deus ? என்ற லத்தீன் சொற்றொடருக்கு 'கடவுளைப் போல யார்?' என்று பொருள்படும். மைக்கேல் (Michael) என்ற பெயரின் பொருளே அது. மைக்கேல் என்ற பெயர் பழைய ஏற்பாட்டில் பலருக்கு இருக்கிறது. டேனியல் புத்தகத்தில் இஸ்ரேலிய இளவரசனுக்கும் அதே பெயர். புதிய ஏற்பாட்டின் Epistle of Jude 1:9 ல் மிக மதிப்புமிக்க தேவதைக்கும் இதேபெயர். திருவெளிப்பாடு புத்தகம் 12 :7 ல் நெருப்புயிர்க்கும் விலங்கைத் தோற்கடித்த தேவதைகளின் தலைவனின் பெயரும் மைக்கேல் தான். நெருப்புயிர்க்கும் விலங்கானது ஒரு சைத்தானும், கெட்ட ஆவியும் கலந்த முன்னாளைய பாம்பு இனம் எனப்படுகிறது.

சிற்பங்களிலும், ஓவியங்களிலும் புனித மைக்கேல் தேவதூத அம்சத்துடன் கூடிய, தலைக்கவசம், போர்வாள், கேடயத்துடன் போர் வீரனாக உருவகப்படுத்தப்படுகிறார். அவர் சாத்தானுடன் போரிடும்போது சில இடங்களில் சாத்தான் நெருப்புயிர்க்கும் விலங்காகவும், சில இடங்களில் மனிதனைப் போன்ற தோற்றத்திலும் காண்பிக்கப்படுகிறார்.

சில ஓவியம், சிற்பங்களில் Quis ut Deus ? என்ற வாசகம் கேடயத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சொற்றொடர், புனித மைக்கேல் வெற்றி ஆரவாரத்துடனும், இறுமாப்பு கலந்த ஏளனத்துடனும் சைத்தானிடம், "கடவுளைப் போல யார்?" என்று கேட்பதுபோலவும் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

வ. க. கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It