குதிரையின் உயரத்தை அளக்கும் முறை வித்தியாசமானது. பலப்பல ஆண்டுகளுக்கு முன்னால், தற்பொழுது உள்ளது போல குதிரைகளின் உயரத்தை அளக்க பொது அளவுகோல்கள் எதுவும் கிடையாது. எனவே அவர்கள் காலங்காலமாக (கைவசமுள்ள) கைகளையே குதிரையின் உயரத்தை அளக்க உபயோகித்தனர். பெருவிரல் உட்பட 'கை' விரல்களை மடக்கிய நிலையே 'கையளவு' எனப்படுகிறது. விரல்களை மடக்கிய நிலையில், கையளவு சாதாரணமாக 4அங்குலம் இருக்கும்.

எனவே உதாரணமாக குதிரையின் உயரம் 58 அங்குலம் இருந்தால், அதை 58 / 4= 14.5 கையளவு என்று சொல்லக் கூடாது.

நான்கு அடி, பத்து அங்குல உயரம் என்றும் சொல்லக் கூடாது.

உயரத்தை 4 அங்குலத்தால் வகுத்தது போக உள்ள அங்குலத்தை, அங்குலமாகச் சொல்லவேண்டும்.

14 கைகளும் அரைக்கையும் என்றும் அல்லது 14.2 அல்லது 14.2 hh (hands high) என்றும் சொல்லவேண்டும்.

இப்படிக் குறிப்பதின் பொருள் 14 கையும், 2 அங்குலமும் என்று பொருள்படும், புரிந்து கொள்ளப்படும்.

எனவே குதிரை உரிமையாளர்களும், வியாபாரிகளும் இதையே 'பதி நான்கு இரண்டு' அல்லது 'பதி நான்கும் அரையும்' என்றும் உரக்கச் சொல்வார்கள்.

எனவே குதிரையின் உயரம் 56, 57, 58, 59, 60 அங்குலம் இருந்தால், அதை முறையே 14.0, 14.1, 14.2, 14.3, 15.0 கைகள் என்று குறிக்க வேண்டும்

அல்லது 14 கைகள், 14 கைகளும் காலும், 14 கைகளும் அரையும், 14 கைகளும் முக்காலும், 15 கைகள் என்றும் முறையே குறிக்க வேண்டும்

அல்லது 14 கைகள், 14 கைகளும் 1 அங்குலமும், 14 கைகளும் 2 அங்குலமும், 14 கைகளும் 3 அங்குலமும், 15 கைகள் என்றும் முறையே குறிக்க வேண்டும்.

தற்பொழுது குதிரையின் உயரத்தை அளக்கும் கருவிகள் சந்தையில் இருந்தாலும், அவைகளிலும் கையளவும், அங்குலமுமே குறிக்கப்பட்டிருக்கும்.

கையளவு குறிக்கப்பட்ட கருவிகளை உபயோகிப்பது எளிது. கருவிகள் (Rigid poles with short cross bars) கையடக்கமானது. கருவிகளின் உயரத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும். மேல் மட்டத்தை சரியாக அளக்க இதில் 'Level angle' பொருத்தப்பட்டிருக்கும்.

உயரத்தை அளக்கும் 'கையளவு' முறை மிகப் பழமையாக இருந்தாலும், இன்றளவும் இதுவே காலங்காலமாக புழக்கத்தில் உள்ளது.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It