தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு - 200 கிராம்

பச்சைமிளகாய் - 8

இஞ்சி - சிறுதுண்டு

பெரிய வெங்காயம் - 100 கிராம்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்துமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பை நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து கிரைண்டரில் இட்டு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மெல்லிய நீளமான துண்டுகளாகவும், பச்சைமிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும். மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி, நசுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவினை சற்றுப் பெரிய வடைகளாகத் தட்டிப்போட்டு இருபுறங்களும் பொன்னிறமானதும் எண்ணெய் வடியவிட்டு எடுக்க வேண்டும்.

Pin It