தேவையானவை:

பாசிப் பருப்பு .....    1 /2 கிலோ 
சீனி...........................1/2 கிலோ சீனி.
நெய்..........................150 கிராம்
முந்திரி......................20
ஏலக்காய்..................5

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, பாசிப்பருப்பை லேசாக பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதிலேயே ஏலக்காயையும் போட்டு வறுக்கவும். முந்திரியை 4-5 துண்டுகளாக நறுக்கி, அதனை கொஞ்சம் நெய் விட்டு வறுக்கவும். பாசிப்பருப்பை அரவை மில்லில் நைசாக அரைக்கவும். இல்லையெனில் பாசிப்பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து சலித்து எடுக்கவும். சீனியையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவு, சீனித்தூள் + முந்திரி போட்டு ஒன்றாக கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடு பண்ணி, கை பொறுக்கும் பதத்தில் இரண்டு கரண்டி நெய்யின மாவில் கொட்டி, அந்த இடத்தை மட்டும் கலக்கி, சூடு ஆறு முன்னே., அதனை உருண்டையாகப் பிடிக்கவும். 

நெய் ஆறிவிட்டால், உருண்டை பிடிக்க முடியாது. ஆனால் தூளாக இருந்தாலும், தூள் டக்கர்தான் தூள்.. சுவைன்னா அப்படி ஒரு சுவை..!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.