தேவையான பொருட்கள்:

கோழி - 1
நறுக்கிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
இஞ்சிப் பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 250 கிராம்
நெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காய விழுது - 1 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
கிராம்பு - 5
கொத்துமல்லி - கொஞ்சம் 

செய்முறை:

கோழியை சுமாரான அளவு துண்டுகளாக வெட்டி சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றவும். நெய் காய்ந்ததும் கிராம்பு, பச்சை மிளகாய் விழுது, வெங்காய விழுது, சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை அதில் போட்டு வதக்கவும்.

இவற்றுடன் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும். சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதனுடன் 200 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பக்குவமாக வெந்ததும் அதில் கொத்துமல்லியை தூவி இறக்கி வைக்கவும்.

Pin It