தேவையானவை:

கோழிக்கறி.................................1 /2 கிலோ
பெல்லாரி...................................4
பச்சை மிளகாய்..........................4 
தக்காளி.....................................4
சிவப்பு மிளகாய்.........................10
மல்லி .............................................25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி................................கொஞ்சம்
மிளகு ...............................................1 தேக்கரண்டி
சீரகம்.................................................1 தேக்கரண்டி
சோம்பு...............................................1 /2 தேக்கரண்டி
கசகசா..................................................1 தேக்கரண்டி
இஞ்சி................................................. 1 இன்ச் நீளம்
பூண்டு................................................10 பல்
தேங்காய்......................................... 1 /2 மூடி
ஏலம்...................................................1
பட்டை............................................. சிறு துண்டு
கிராம்பு...............................................5
எண்ணெய்.......................................3 தேக்கரண்டி
கறிவேப்பிலை..............................1 கொத்து
உப்பு ...............................................தேவையான அளவு

செய்முறை:
 
chicken_370கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக நறுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும்,ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை+ கிராம்பையும் போடவும். சிவந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு,அதில் தட்டிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கோழிக்கறி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

கறி நன்கு வதங்கி நீர் விட்டு வரும். இதனை 5 -10 நிமிடம் வதங்கியதும் கறி நன்கு வெந்துவிடும், அதில் அரைத்த மிளகாய் +தேங்காயை போட்டு வதக்கி, கறி முழுகும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.

கிராமத்துக் கோழிக் குழம்பு மிளகாய் பொடியில் செய்யாததால், தனியான, மணம், சுவையுடன், சூப்பராக இருக்கும். வாசனையே உங்களை வா, வா, என்று அழைக்கும்..! இதனை இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி மற்றும் பராத்தாவுக்கு துணையாக சாப்பிட்டால் டக்கராக இருக்கும்.

Pin It