தேவையான பொருட்கள்: மீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.
பெரிய மீன் துண்டுகள்- 10
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கிரேவி தயாரிக்க:
பூண்டு - 7 பல்
வெங்காயம் - 3
குடை மிளகாய் - 1/2 நறுக்கியது
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 8 இலைகள்
நெய் - 3 ஸ்பூன்
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை:
இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும். பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடுங்கள். தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதியும் சாதி ஆணவக் கொலைகளும்
- ‘நீட்’ நுழைவும் - தமிழ்நாட்டு மாணவர் வெளியேற்றமும்
- காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையும், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானமும்
- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பாயத்தில் முழங்கிய சிங்களர்! - 3
- சாதி எனும் சதியில் சிக்கிய திருநங்கைகள்
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன்
- மறுஜென்மன்
- நத்தை மனிதர்கள்!
- சூழ்ச்சி வெளிப்பட்டது
- பொய்த்திரை விரிக்கும் மெய்வலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்