தேவையானவை:

கட்லா/விரால்/கண்ணாடி கெண்டை மீன்...1 கிலோ
சின்ன வெங்காயம்..... ................................150 கிராம்
சீரகம் ............................................................1 /2 தேக்கரண்டி
மிளகு.............................................................. 1 /2 தேக்கரண்டி
இஞ்சி..............................................................1 /2 இன்ச்
பூண்டு..............................................................10 பல்
தேங்காய்.........................................................1 /4 மூடி
பச்சை மிளகாய்.............................................5
தக்காளி................................................................4
மாங்காய் இருந்தால் ........................................1
குழம்பு மிளகாய்ப் பொடி (இருந்தால்)..........4 தேக்கரண்டி
இல்லாவிடில் மிளகாய் + மல்லிப் பொடி............தலா 2  தேக்கரண்டி
பழைய புளி ......................................................இரண்டு எலுமிச்சை அளவு
தே.எண்ணெய்..................................................75 மில்லி
உப்பு .....................................................................தேவையான அளவு
கறிவேப்பிலை.............................................................ஒரு கொத்து
தாளிக்க கறிவடகம் / கடுகு சீரகம்............................கொஞ்சம்.

செய்முறை:

fried_fish_gravy_400மீனை சுத்தமாக கழுவிக் கொள்ளவும். மீனில் கொஞ்சம் உப்பு + மஞ்சள் பொடி போட்டு பிசறி வைக்கவும். புளியை ஊறவைக்கவும். வெங்காயத்தை உரிக்கவும். அதில் முக்கால்வாசியை மெலிதாக நறுக்கவும். ப.மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தக்காளி + மாங்காயை நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், 10 வெங்காயம், தேங்காய், பூண்டு +இஞ்சியை நன்றாக அரைக்கவும். மேலே சொன்னவற்றை பூண்டு, இஞ்சி தவிர மற்றவற்றை வறுத்தும் அரைக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

அடுப்பில் கடாயை வைத்து, பாதி எண்ணெயை ஊற்றி, சூடானதும் கருவடகத்தைப் போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாயை+ கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பிறகு தக்காளி போட்டு வதக்கியபின், மிளகாய்ப் பொடியைப் போட்டு, ஒரு பிரட்டு பிரட்டிய பின் அதில் புளியைக்கரைத்து ஊற்றவும். அதில் உப்பு + அரைத்த மசாலா போடவும். தேவையான அளவு நீர் ஊற்றவும். நன்கு கொதிக்க விடவும்.

இன்னொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். பிறகு அதிலேயே மீனைப் போட்டு 2 நிமிடத்தில் எடுத்துவிடவும். பின்னர் மீன் அனைத்தையும் இப்படியே பொரித்து குழம்பில் எடுத்துப் போடவும். மீதமுள்ள எண்ணெயை குழம்பிலே ஊற்றவும். குழம்பு சுண்டியதும், வறுத்த கறிவேப்பிலைப் போட்டு இறக்கவும்.

வறுத்த மீன் குழம்பு அற்புத மணத்துடன், மணக்க, மணக்க இருக்கும். மீன் கவுச்சியே இருக்காது.

Pin It