தேவையான பொருட்கள்: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய நண்டு - 2
தக்காளி விழுது - அரை கப்
வெங்காயம் - ஒன்று
முட்டை - 2
சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த நண்டு கறி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்துக் கலக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை?
- ஏன் இவ்வளவு அவசரம்?
- ‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது
- அரசியல் நிலை
- 170 தொழிலாளர்கள் பலியானது ஏன்?
- ருஷியா விடுதலை அடைந்த விதம்
- ராமேஸ்வரம் கோவிலுக்குள் சங்கராச்சாரி கும்பலின் ரவுடியிசம்
- கமலின் ஆரோக்கியம் நாயின் மடிப்பால்
- யாகாவாராயினும் நாகாக்க!
- கோயில் புரட்சி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சூப்
நண்டு தக்காளி சூப்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.