தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய் - 4
மிளகாய்த்தூள் - 100 மில்லிகிராம்
பெருங்காயம் - ஒரு துண்டு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 பிடி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
 
செய்முறை

மாங்காயை சுத்தம் செய்து சிறிய‌ துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து பெருங்காயத்தையும், வெந்தயத்தையும் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை விட்டு கடுகைப் போட்டு தாளித்து மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். மாங்காய் நன்றாக வதங்கி வெந்ததும் காரப் பொடி, உப்பு, பொடித்து வைத்த பெருங்காயம், வெந்தயத்தைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.

Pin It