தேவையானவை:

பிரியாணி அரிசி/சீரக சம்பா அரிசி.........1 /2 கிலோ
ஆட்டுக்கறி....................................................1 /4 கிலோ
சின்ன வெங்காயம்...................................1 /2 கிலோ
பெல்லாரி......................................................150 கிராம்
பச்சை மிள்காய்............................................5
தக்காளி...........................................................150 கிராம்
இஞ்சி................................................................50 கிராம்
பூண்டு..............................................................50 கிராம்
எலுமிச்சை...................................................1 /2 மூடி
பட்டை...........................................................5 கிராம்
கிராம்பு..............................................................5 கிராம்
ஏலம்..................................................................5
முந்திரி......(தேவையானால்)........................20
தேங்காய்..(தேவையானால்)........................1 /2 மூடி
புதினா.............................................................75 கிராம்
மல்லி ..............................................................75 கிராம்
தயிர்.................................................................1/4 கிலோ
எண்ணெய்.......................................................150 மில்லி
நெய்..................................................................50 கிராம்
உப்பு.................................................................தேவையான அளவு

செய்முறை:

பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். தக்காளியை மெலிதாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். இஞ்சி,பூண்டையும் அரைக்கவும். தேங்காயை மிக்சியில் அரைத்து,குறைவான நீரில் பால் எடுக்கவும். 10 முந்திரியை அரைத்துக்கொள்ளவும். 10 முந்திரியை நெய்விட்டு வறுக்கவும்.

பட்டை, கிராம்பு + ஏலக்காயை வறுத்து பொடி செய்யவும். அரிசியை கல் நீக்கி, கழுவி ௨௦ நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் குக்கர்/பெரிய பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் +ப.மிளகாய் போட்டு நன்கு சிவப்பாக மொறு மொறுவென வதக்கவும். அதிலேயே, மல்லி புதினா போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில அரைத்த இஞ்சி, வெங்காயம் பொட்டு நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து தக்காளி+ உப்பு போட்டு நன்கு வதக்கவும். அதில் கறியைப்போட்டு 15 -20 நிமிடம் வரை நன்கு வதக்கவும். பின் அதில் 750 மில்லி நீர் ஊற்றவும்.

நீர் கொதித்ததும் அதில் தயிர்+ எலுமிச்சை சாறு ஊற்றவும். பின்னர் அதிலேயே தேங்காய் பால் + அரைத்த முந்திரி போடவும். பின் அரிசியைப் போட்டு கிளறி விடவும். கொஞ்ச நேரத்தில் அரிசி வெந்து நீர் குறைந்ததும்,அதில் வறுத்த முந்திரி + புதினா + நெய் போட்டு கிளறி தம் போடவும்.

எப்படி தம் போடுவது ?

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் மணலைப் பரப்பி சூடு பண்ணவும்.அதன் மேல் பிரியாணி இருக்கும் குக்கர்/பாத்திரம் வைத்து அதனை சரியாக ஒரு தட்டால் மூடி,அதன் மேல் ஒரு பாத்திரத்தில் (தட்டகலம் உள்ளது) கொதிக்க வைத்த நீரை வைக்கவும். அடுப்பை 15 நிமிடம் எரித்து பின் அடுப்பை அணைத்துவிடவும். 10 நிமிடம் கழித்து தம்மை எடுத்துவிட்டு ஒரு கிளறு கிளறி சூட்டோடு பரிமாறவும்.

துணைக்கு சால்னா/தாளிச்சா + வெங்காய தயிர் பச்சடி தூள் கிளப்பும். இந்த பிரியாணி அதிக மசாலா இல்லாமல், திகட்டாமல், சூப்பராய் இருக்கும்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It