தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1

வெங்காயம் - 200 கி

பூண்டு - 8 பல்

பச்சை மிளகாய் - 4

பொட்டுகடலை மாவு - 1/2 கப்

இஞ்சி - 25 கி

எண்ணெய் - 1 கரண்டி

கருவேப்பில்லை

உப்பு தேவையான அளவு

செய்முறை:

புடலங்காய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு வாணலியில் எண்ணெய் சூடானதும் கருவேப்பில்லை போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.  பச்சை மிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதிக்கி புடலங்காய் சேர்த்து வதக்க வேண்டும். உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இறக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பொட்டுகடலை மாவு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்க வேண்டும்

Pin It