தேவையான பொருட்கள்:

பச்சரிரிசி - நூறு கிராம்
புழுங்கலரிசி - நூறு கிராம்
பாசிப் பருப்பு - நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து - நூறு கிராம்
வர மிளகாய் - 5
பூண்டு - இரண்டு பல்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - இருநூறு கிராம் 

செய்முறை:

முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை மிக நைசாக நறுக்க வேண்டும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்க வேண்டும்.

வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்க வேண்டும். வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்க வேண்டும். தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விட வேண்டும். சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்க வேண்டும்.

Pin It