தேவையான பொருட்கள்:

புடலங்காய் - சிறிய பிஞ்சு 1
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
நெய் - சிறிதளவு
தேங்காய் - கால் மூடி
கறிவேப்பிலை - தேவையான அளவு 

செய்முறை:

புடலங்காயை சிறுசிறு வளையங்களாக நறுக்கி விதைகளை நீக்கி விடவேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டு இரண்டு மிளகாயினை கிள்ளிப் போட்டு, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைப் போட்டுத் தாளிக்க வேண்டும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள புடலங்காயைப் போட்டு புரட்டிவிட வேண்டும். காய் வெந்ததும், துருவிய தேங்காயைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கிவிட வேண்டும்.

Pin It