தேவையான பொருட்கள்: ரவா, மைதா, அரிசி மாவு இவற்றுடன் சீரகம் மற்றும் உப்புச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கி, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து இருந்து பிறகு எடுத்து தோசையாக ஊற்ற வேண்டும். தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, பிறகு எடுத்துத் திருப்பிப் போட்டு வேகவிட வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு வெந்த பிறகு எடுத்துப் பரிமாற வேண்டும்
ரவா - ஒரு கப்
மைதா - அரை கப்
அரிசிமாவு - அரை கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
கீற்றில் தேட...
ரவா தோசை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்