malli_rice_600

தேவையானவை:

பச்சரிசி/பாஸ்மதி அரிசி............1 ஆழாக்கு
மல்லி..........................................150 கிராம் (நைசாக அரைத்து வைக்கவும்)
காய்ந்த மிளகாய்........................3
கடுகு, உ.பருப்பு............................1/2 தேக்கரண்டி
இஞ்சி............................................சின்ன துண்டு (பொடியாக நறுக்கவும்)
காரட்............................................1 ( துருவி வைக்கவும்)
முந்திரி பருப்பு...........................10
எண்ணெய்............................... 1 தேக்கரண்டி
நெய்........................................... 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை .............................1 கொத்து
உப்பு............................................. தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை நன்கு களைந்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு போட்டு வேகவைக்கவும். ஆவி போன பின் ஒரு பாத்திரத்தில் போட்டு நெய் விட்டு உதிர்த்து விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிளகாயை இரண்டாக ஒடித்துப்போட்டு, கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதில் முந்திரி, கறிவேப்பிலை போட்டு சிவந்த பின், காரட், இஞ்சி போட்டு வதக்கவும்.

பிறகு அதில சாதம் + அரைத்த மல்லி போட்டு கிளறவும். இறக்கி பரிமாறவும். துணைக்கு அப்பளம், பச்சடி, முட்டைப் பொரியல் எது வேண்டுமானாலும் சூப்பராக இருக்கும். செய்து பாருங்களேன்.

Pin It