தேவையானவை:

அரிசி............................2 ஆழாக்கு
தக்காளி.......................6
சுரைக்காய்..................ஒரு துண்டு/சாண் நீளம்
பெல்லாரி....................4 
பச்சை மிளகாய்..........5
இஞ்சி..........................1  இன்ச் நீளம்
பூண்டு..........................10 பல்
புதினா...........................கைப்பிடி
மல்லி.............................கொஞ்சம்
கறிவேப்பிலை..............1 கொத்து
பிரிஞ்சி இலை................ 2 துண்டு
பட்டை............................சிறு துண்டு
கிராம்பு...........................3
ஏலம்...............................1
எண்ணெய்......................25  மில்லி
உப்பு .................................தேவையான அளவு
நெய் தேவையானால்....2 தேக்கரண்டி

செய்முறை:
 
tomoto-rice_370அரிசியைக் கழுவி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். சுரைக்காயை சீவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லி, புதினாவை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை  போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில்சுரைக்காய்+ அரைத்த விழுதைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டிவிட்டு, அதிலேயே நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். பின் அதில் அரிசியைப் போல் இரண்டு மடங்கு நீர் விடவும். அரிசி பழையதாக இருந்தால் 2 1/2 மடங்கு நீர் விடலாம்.

நீர் கொதித்ததும் அரிசி + உப்பு போட்டு, குக்கரை மூடி விடலாம். ஒரு விசில் வந்ததும், சிம்மில் வைத்து 5 நிமிடம் ஆனதும் இறக்கி விடவும். ஆவி போன பின், வேண்டுமானால் 2 தேக்கரண்டி நெய் விட்டு, சாதத்தை கிளறி, சூடாக பரிமாறவும்.

தக்காளி சாதம் சுவையாக இருக்கும். இதற்கு தயிர் பச்சடி, புதினா/மல்லி சட்னி, உருளை சிப்ஸ்/வறுவல் எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம்.

Pin It