தேவையானவை:
 
சுரைக்காய்...................1 /4 கிலோ
பாசிப் பருப்பு.................கைப்பிடி
மஞ்சள் பொடி...............கொஞ்சம்
சின்ன வெங்காயம்.....10
பச்சை மிளகாய்...............1-2
தேங்காய் துருவல் .....3 தேக்கரண்டி .
சீரகம்..............................1/2 தேக்கரண்டி
எண்ணெய்.....................2 தேக்கரண்டி
கடுகு,உ.பருப்பு...............1 /2 தேக்கரண்டி
பெருங்காயம்..................கொஞ்சம்
கறிவேப்பிலை................1 கொத்து
உப்பு..................................தேவையான அளவு

செய்முறை:

surakkai_370பாசிப்பருப்பை 1 /2 மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை சின்ன துண்டாக நறுக்கி, பாசிபருப்பு, மஞ்சள் பொடியுடன் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். 3 வெங்காயம் தவிர, மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகம், ப. மிளகாயை நன்கு அரைத்து, அதில் 3 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு போட்டு, கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேகவைத்த பாசிப் பருப்பு, சுரைக்காய் ,அரைத்த தேங்காய், சீரகம் +உப்பு போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றவும். கூட்டு நன்றாக கொதித்து, கெட்டியாக வரும்போது பெருங்காயத்தை தூவி, இறக்கவும்.

இந்த கூட்டு புளிக்குழம்பிற்கு சரியான ஜோடி..! இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Pin It