தேவையானவை:

தக்காளி....4
வெங்காயம்......10
பூண்டு...6
உ.பருப்பு...1 /2 தேக்கரண்டி
க.பருப்பு... 1 /2 தேக்கரண்டி
மல்லி.. 1/4 தேக்கரண்டி
மிளகாய்........ 3
புளி................ சுண்டைக்காய் அளவு...
கறிவேப்பிலை.. உப்பு.. தேவையான அளவு
எண்ணெய்............. 1 தேக்கரண்டி
தாளிக்க... கடுகு..பருப்பு...1 /4தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை உரிக்கவும். தக்காளியை நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து மிளகாய், மல்லி, பருப்பு போட்டு வறுக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் + உப்புத்தூள் துளியூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் எளிதாக சீக்கிரம் வதங்கும். தக்காளியையும் வதக்கி எடுக்கவும்.

மிக்சியில் வறுத்த மிளகாய், மல்லி பருப்பைப் போட்டு நீர்விடாமல் அரைக்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, புளி + உப்பு போட்டு கொஞ்சம் நீர் விட்டு அரைக்கவும். எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு + உ.பருப்பு போட்டு தாளிக்கவும். இதோ சுவையான தக்காளி சட்னி ரெடி.

Pin It