தேவையானவை:

புழுங்கல் அரிசி...........................ஆழாக்கு
து.பருப்பு.........................................கால் ஆழாக்கு
க.பருப்பு.......................................... கால் ஆழாக்கு
பாசிப்பருப்பு.................................... கால் ஆழாக்கு
உ.பருப்பு..........................................கைப்பிடி
காரட்...............................................ஒன்று
பசலை/ எந்த கீரையும்.............கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் பெல்லாரி......கைப்பிடி அளவு
முள்ளங்கி இருந்தால்....................ஒன்று
சுரைக்காய்..இருந்தால்.................சின்ன துண்டு
மிளகாய் பொடி.............................ஒரு தேக்க்ரண்டி
இஞ்சி.................................................சின்ன துண்டு
உப்பு தேவையான அளவு
பெருங்காயம்...தேவையானால்......கொஞ்சம்.
எண்ணெய்..(அடை சுட)............... நூறு மில்லி

செய்முறை :

அரிசி, பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை வடிகட்டி உப்பு போட்டு பரபரவென் நீர் ஊற்றாமல் அரைத்து எடுக்கவும். வெங்காயம் + இஞ்சியைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும் காரட், முள்ளங்கி +சுரைக்காயை நன்கு கழுவி, காரட் சீவுவதில் சீவி வைக்கவும். கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு,உ.பருப்பு போட்டு சிவந்ததும், அதிலேயே நறுக்கிய வெங்காயம் + சீவிய காய்கள் + கீரை + கொஞ்சம் உப்பு போட்டு லேசாக வதக்கவும். வெங்காயத்தில்/காய்கறியில் லேசாக உப்பு போட்டு வதக்கினால் உப்பால் இணைக்கப்பட்டு சீக்கிரம் வதங்கிவிடும். இப்போது வரும் வெங்காயம் அனைத்தும் ஒட்டு வீரிய வகை என்பதால் வதங்க ரொம்ப நேரம் ஆகிறது. இதனை உப்பு குறைக்கும்.

adai_thosai_370வதக்கிய வெங்காயம் + கீரை + காய்களை எடுத்து அரைத்த மாவில் போடவும். இதில் மிளகாய்த் தூள் + பெருங்காயம் போட்டு கலக்கி, கொஞ்ச்ம் தாராளமாய் நீர் ஊற்றி கெட்டியாக் இல்லாமல் நன்கு தண்ணியாக கரைக்கவும். தோசை மாவை விட நீர்த்து இருக்கலாம்.

அடுப்பில் அடைதோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் தடவி அடையை ஊற்றி எடுக்கவும். அடை கல்லில் ஒட்டினால், பெரிய வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதனை சூடான கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு எண்ணெய் தடவி தோசை ஊற்றினால் தோசை ஒட்டாது.

கீரை அடை தோசை ஏராளமான தாது உப்புக்களும், வைட்டமின்களும் நிறைந்தது. உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கும் நல்லது. கலராகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையோ சும்மா டக்கராக இருக்கும். சும்மாவே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கரும்பு சர்க்கரை வைத்து கொடுக்கலாம். பெரியவர்கள் சட்னி/சாம்பார் தொட்டு சாப்பிடலாம்.

Pin It