தேவையானவை:

துவரம் பருப்பு.............கைப்பிடி
எலுமிச்சை...................1
தக்காளி.........................3
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.............................1 இன்ச் நீளம்
சீரகம்.............................1 /2 தேக்கரண்டி
கடுகு..............................1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து
உப்பு................................தேவையான அளவு
சீனி.................................1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும்.  பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர்   ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It